எம்மில் சிலருக்கு வேர்க்கடலை அல்லது இறால் மீன் போன்ற சில உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கும். இதனை அறியாமல் சிலர் சூழல் காரணமாக வேர்க்கடலையோ அல்லது இறால் மீனையோ சாப்பிட்டால், தீவிர ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு இயல்பான அளவை விட அதிக அளவிற்கு எதிர்வினையாற்றி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தீவிர ஒவ்வாமை பாதிப்புக்கு உள்ளாவோர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
திடீரென்று தோலில் ஏற்படும் அரிப்பு, சிவந்த நிறம், குறைந்த இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம், சமச்சீரற்ற இதயத்துடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், நீங்கள் அனாபிலாக்சிஸ் எனும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தீவிர ஒவ்வாமை எதிர்வினைக்கு ஆளாகி இருக்கக்கூடும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உடனடியாக பிரத்யேக இரத்த பரிசோதனையை மேற்கொண்டு, இதற்கான முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.
இதன்போது உடலில் எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் அதிதீவிரமாக செயல்பட்டு இயல்பான அளவை விட கூடுதலாக ரசாயனங்களை வெளிப்படுத்துவதால், இத்தகைய ஒவ்வாமை எதிர்வினை பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், இதன்போது மருத்துவர்கள் உங்களுடைய உணவு முறையையும், நீங்கள் பசியாறும் உணவு பட்டியலையும் உணவுப் பொருட்களையும் விரிவாக கேட்பர். ஒவ்வாமை ஏற்படுத்திய காரணத்தை துல்லியமாக அவதானித்து அதனை ஆயுள் முழுவதும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைப்பர்.
பொதுவாக குழந்தைகளுக்கு பால்மா பொருட்கள், சில வகையினதான மீன், வேர்க்கடலை, மரக்கொட்டைகள் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
பெரியவர்களை பொருத்தவரை சில பிரத்யேக மருந்துகளை தொடர்ந்து பாவிப்பதன் மூலம் அதன் பக்க விளைவாக இத்தகைய அனாபிலாக்ஸிஸ் எனும் தீவிர ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு தேனீக்களின் கொடுக்குகள், குளவி, றப்பர் மரப் பால், எம்.ஆர்.ஐ. பரிசோதனையின்போது பயன்படுத்தும் பிரத்யேக சாயங்கள் போன்றவற்றால் கூட தீவிர ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும்.
இதனை மருத்துவ மொழியில் Anaphylactic Shock என்றும் குறிப்பிடுவர். அதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், பாதிப்பு ஏற்பட்ட தருணத்திலிருந்து கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் ஒன்றரை மணித்தியாலத்துக்குள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஊசி மூலமாக செலுத்தப்படும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கான உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.
- டொக்டர் பாலமுருகன்
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM