எம்மில் பலரும் தலைவலியா.. உடனடியாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு, அதிலிருந்து உடனடியான நிவாரணம் பெறவே விரும்புகிறார்கள். அதே போல் உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் உடனடியாக நிவாரணம் தரும் வலி நிவாரணிகளையே நாடுகிறார்கள். இவ்வாறு செய்பவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இத்தகைய வலி நிவாரணிகளால் சீரான இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட்டு, இதயச் செயலிழப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டிக்கிறது.
இப்போதைய தலைமுறையினர் பயன்படுத்தும் வலிநிவாரணிகளில் ஸ்டீராய்ட் அல்லாதவற்றிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருந்தாலும்இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்துவோர்களுக்கு atrial fibrillation எனப்படும் இயல்பற்ற இதயத்துடிப்பு அல்லது சீரற்ற இதயத்துடிப்பு உருவாகிறது என்றும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் 40 சதவீதத்தினர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரூமாட்டாய்ட் ஆர்த்தரைடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்தும் போது உடலில் உள்ள கல்லீரல், சிறுநீரகத்தின் நச்சு நீக்கப் பணியின் சுமை அரிகரிக்கிறது. ஏற்கனவே முதுமையின் காரணமாக இவற்றின் பணி குறைந்திருக்கும். இந்நிலையில் இத்தகைய வலி நிவாரணிகள் உடலில் சேர்வதால் இதனை வெளியேற்றும் பொறுப்பும் இவற்றிற்கு ஏற்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டு இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகுவதற்கு வழிஏற்படுகிறது. எனவே இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்தும் போது மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
டொக்டர் அகர்வால்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM