முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல் தெய்வ வழிபாடு

19 Feb, 2024 | 06:53 PM
image

எம்மில் பலரும் ஆண்டுதோறும் தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு, தங்களது வளர்ச்சியை சீராக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வர். வேறு சிலர் தங்களுடைய தன வரவை அதிகரிக்கும் நட்சத்திரத்திற்கான தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு தங்களது முன்னேற்றத்தை நிர்ணயித்துக் கொள்வர்.‌ 

ஜாதகத்தை நம்பாமல் கடுமையான உழைப்பையும், மனதில் தோன்றும் தருணத்தில் அன்னதானத்தையும் செய்து வாழ்க்கையில் முன்னேறுபவர்களும் இருக்கிறார்கள். அதே தருணத்தில் சிலர் குலதெய்வ வழிபாட்டையோ.. தன வரவை அள்ளித்தரும் நட்சத்திர சூட்சம வழிபாட்டையோ மேற்கொள்வதை காட்டிலும், காவல் தெய்வ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு முன்னேறுவர். 

சிலருக்கு இது ஆச்சரியத்தை தரலாம். ஆனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் காவல் தெய்வ வழிபாடு.. முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அள்ளித் தரும் என குறிப்பிட்டிருக்கிறார்கள். 

பொதுவாக ஜாதகத்தில் கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் காவல் தெய்வ வழிபாடு எப்போதெல்லாம் மேற்கொள்கிறார்களோ... அப்போதெல்லாம் அந்த தருணத்திய நெருக்கடியிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் மீள்வர். லக்னத்திலிருந்து ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோண ஸ்தானத்தில் ராகு பகவான் இருந்தாலோ அல்லது சூரியன், சனி ஆகிய கிரகங்கள் இணைவு பெற்றிருந்தாலோ சனிபகவான் லக்னத்துடனும், லக்னாதிபதியுடனும் இணைவு பெற்றிருந்தாலோ.. பார்வை பெற்றிருந்தாலோ.. சனி, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் இணைவு பெற்றிருந்தாலோ... அவர்களுக்கு காவல் தெய்வ வழிபாடு பெரியளவில் அருள் பாலித்து அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

சனிபகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும்.. சனி பகவான் கேந்திர ஸ்தானம் எனப்படும் லக்னத்திலிருந்து ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்களில் இருந்தாலும் காவல் தெய்வ வழிபாடு பேருதவி புரியும். ஏனெனில் நவகிரகங்களில் சனி பகவான் தான் காவல் தெய்வமாக அருள் பாலிக்கிறார் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுவதுண்டு.

காவல் தெய்வம் என்பது குலதெய்வத்தின் காவல் தெய்வம், எல்லை தெய்வம், எல்லை கடவுள், காவல் தெய்வம்... என பல வகைகளில் நாம் வணங்கி வருகிறோம். மேலும் பதினெட்டாம் படி கருப்பர், மதுரை வீரன், சங்கிலி கருப்பன், அய்யனார், பாண்டி முனீஸ்வரர், எல்லை பிடாரி அம்மன், மகா முனி அம்மன் என ஏராளமான காவல் தெய்வங்கள் உள்ளன.

சனி பகவான் உங்களுடைய ஜாதகத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தால், நீங்கள் காவல் தெய்வ வழிபாட்டை முறையாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொண்டால் வளர்ச்சி உறுதி என்பதை அனுபவத்தில் உணரலாம். மேலும் குலதெய்வ வழிபாடு எம்முடைய குலத்தை பேணி பாதுகாத்து ஓங்கி வளரச் செய்யும் என்றால்... காவல் தெய்வத்தை வழிபட தொடங்கினால், எம்முடைய வம்சம் தங்கு தடையின்றி மேம்பட்ட நிலையில் விருத்தியடையும். 

மேலும் காவல் தெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டவர்கள் தங்களது எதிரிகளை வெற்றி கொண்டு முன்னேறுவதையும் அனுபவத்தில் காணலாம்.

உடனே எம்மில் பலரும் தங்களின் காவல் தெய்வத்தை குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் வழியாகவோ அல்லது சோதிட நிபுணர்கள் வழியாகவோ அல்லது இணையத்தின் வழியாகவோ அறிந்து கொண்டிருப்பர். ஆனால் எந்த கிழமைகளில் சென்று வழிபடுவது என தெரியாமல் தவிப்பர். பொதுவாக காவல் தெய்வ வழிபாட்டை சனிக்கிழமைகளில் மேற்கொள்வது தனிச்சிறப்பு. 

அதே தருணத்தில் காவல் தெய்வம் பெண் தெய்வமாக இருந்தால், சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையில் சென்று முறையாக பூஜித்து, மனமுருக பிரார்த்தித்து வழிபட வேண்டும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33