சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' பட அப்டேட்

19 Feb, 2024 | 05:58 PM
image

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். 

சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேசப்பற்று தொடர்பான எக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.‌

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்திய இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணியாற்றும் இராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். 

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலும், டைட்டிலுக்கான டீசரும் வெளியிடப்பட்டது. 

இப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் இராணுவ வாகனத்தில் கம்பீரமாக இராணுவ சீருடையுடன் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34