மன்னாரில் 10 வயது சிறுமி கொலை ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

19 Feb, 2024 | 03:49 PM
image

மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை பொலிஸார்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

இதன்போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 14:11:03
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53