எப்பாவல பிரதேசத்தில் உயிரிழந்த உடற்பயிற்சியாளர் ஒருவரின் மரணம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவர் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த வாரம் சனிக்கிழமை (10) குறித்த உடற்பயயிற்சியாளர் தனது வீட்டில் வீழ்ந்து காணப்பட்டுள்ளார். இவரை அவரது இளைய சகோதர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (15) அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது இழப்பைத் தாங்க முடியாத அவரது தந்தை விஷம் அருந்திய நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், உடற்பயிற்சியாளர் மதுபானம் அருந்திவிட்டு வீட்டின் முன் வீழ்ந்து கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், இந்த மரணம் சந்தேகத்துக்கிடமாக உள்ளதால் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM