வயல் உரிமையாளருக்கு தெரியாமல் இரவோடு இரவாக நெல் அறுவடை : நடவடிக்கை எடுக்காத பளை பொலிஸார் 

19 Feb, 2024 | 10:55 AM
image

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் உள்ள மூன்று ஏக்கர் வயல் காணியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் இரவிரவாக உரிமையாளருக்கே தெரியாமல் அறுவடை செய்யப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் கடந்த 1ஆம் திகதி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இது தொடர்பில் உடனடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி  திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஆகியோர் பொலிஸாருக்கு கடிதங்களை வழங்கியபோதும், இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17