பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களின் பெறுபேறுகளை மோசடியாக மாற்றுவதற்கு தான் உதவியதாக ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையாளர் ஒருவர் இராஜினாமா செய்தார்.
ராவல்பிண்டி பிராந்திய தேர்தல்கள் ஆணையாளர் லியாகத் அலி சட்தா என்பவரே இவ்வாறு சனிக்கிழமை இராஜினாமா செய்தார்.
பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றம் மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.
'இத்தேர்தல்களில் வெற்றியீட்டிய சுயேச்சை வேட்பாளர்கள் பலருக்குரிய வாக்குச் சீட்டுகளில் போலி முத்திரை குத்தி, அவர்களை நாம் தோல்வியடையச் செய்தோம்' என செய்தியாளர்களிடம் லியாகத் அலி கூறினார்.
ராவல்பிண்டி பிராந்தியத்தில் வெற்றி பெற்ற 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தோல்வியடையச் செய்யப்பட்டனர் என அவர் கூறினார்.
'70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த ஒருவரையும் நாம் தோல்வியடையச் செய்தோம். இரவில் தோல்வியடைந்திருந்த வேட்பாளர்கள் காலையில் வெற்றியாளர்களாக மாற்றப்பட்டனர்' என அவர் கூறினார்.
சட்டவிரோதமான இந்த அனைத்து செயல்களுக்கும் தான் பொறுப்பேற்பதாக, ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் கூறிய லியாகத் அலி, பாகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தினார்.
தனது செயலுக்காக வருந்துவதாகக் கூறிய அவர், இந்நடவடிக்கையினால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் தன்னால் உறங்க முடியாமல் போனதாகவும் கூறினார்.
பொலிஸாரிடம் தான் சரண டைவதாக கூறிய அவர், தனது குற்றச்செயலுக்காக தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார்.
லியாகத் அலி சட்தாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. பெறுபேறுகளை மாற்றியமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு எதுவும் விடுவிக்கப்படவில்லை என அவ்வாணைக்குழு கூறியுள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்படி தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாக இம்ரான் கானுக்கு ஆதரவான சுயேச்சை வேட்பாளர்கள் பலர் ஏற்கெனவே குற்றம் சுமத்தியிருந்தனர்.
அதேவேளை, சிந்து மாகாண சட்டமன்றத்துக்கான கராச்சி பிராந்திய தொகுதியொன்றில் வெற்றி யீட்டியதாக அறிவிக்கப்பட்ட ஜமாத் ஈ-இஸ்லாமி கட்சியின் தலைவரான ஹாபிஸ் நயீமுர் ரெஹ்மான், அத்தொகுதியில் 4 ஆவது இடம்பெற்ற, இம்ரான் கான் சார்பு வேட்பாளரே உண்மையான வெற்றியாளர் எனக் கூறி, தனது வெற்றியை தான் ஏற்கப்போவதில்லை என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM