இன்றைய வானிலை 

19 Feb, 2024 | 06:15 AM
image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ மாகாணத்தின்  சில இடங்களில்  பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். 

மத்திய மலைப்பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 35 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து  காற்று வீசும். 

காலி  தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ;...

2025-01-24 15:20:43
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய...

2025-01-24 15:28:45
news-image

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம்...

2025-01-24 15:15:39
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி...

2025-01-24 15:00:43