டயலொக் கனிஷ்ட வலைபந்தாட்ட சம்பியனானது நெட் சாம்ப்ஸ்

Published By: Vishnu

19 Feb, 2024 | 02:49 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் கொழும்பு, டி.எஸ்.எஸ். சேனாநாயக்க கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்ட 2023க்கான டயலொக் கனிஷ்ட தேசிய வலைபந்தாட்டப் போட்டியில் குருநாகல் மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் சார்பாக போட்டியிட்ட  நெட் சாம்ப்ஸ் (Net Champs) அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இந்த சுற்றுப் போட்டி முழுவதும் மிகத் திறமையாக விளையாடிய செட் சாம்ப்ஸ் அணி ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் சம்பியன் பட்டத்தை சூடியது.

இறுதிப் போட்டியில் ஹில்வூட் அணியை 25 - 17 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு டயலொக் கிண்ணத்தை நெட் சாம்ப்ஸ் சுவீகரித்தது.

குருநாகல், கண்டி மாவட்ட அணிகள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குருநாகல் நெட் சாம்ப்ஸ் அணியும் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் சார்பாக கண்டி ஹில்வூட் கழகமும் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மோதின.

சீ.ஆர். மைதானத்தில் கண்டி கழகத்தை வீழ்த்தி லீக் சம்பியன் பட்டத்தை சீ.ஆர். கழகம் சூடிய சொற்ப நேரத்தில் டி.எஸ்.எஸ். மைதானத்தில் மற்றொரு கண்டி அணி வலைபந்தாட்டத்தில் குருநாகல் நெட் சாம்ப்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

நெட் சாம்ப்ஸ் அணியும் ஹில்வூட் அணியும் முதலாவது 10 நிமிட ஆட்ட நேரத்தில் கடுமையாக மோதிக்கொண்டன. இறுதியில் நெட் சாம்ப்ஸ் அணி 6 - 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நெட் சாம்ப்ஸ் அணி அப்பகுதியை 9 - 2 என தனக்கு சாதகமாக்கி இடைவேளையின்போது 15 - 7 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது,

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் நெட் சாம்ப்ஸ் செலுத்திய ஆதிக்கமே அதன் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணிகளும் மீண்டும் சமமாக மோதிக்கொள்ள ஒருவாறு அப்பகுதியை 6 - 5 என்ற கோல்கள் அடிப்படையில் நெட் சாம்ப்ஸ் தனதாக்கிக்கொண்டது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணியினரும் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். இதன் காரணமக கோல்கள் குறைந்த அளவில் போடப்பட்டன. அப்பகுதியை 5 - 4 என ஹில்வூட் தனதாக்கியபோதிலும் ஒட்டுமொமத்த நிலையில் நெட் சாம்ப்ஸ் 25 - 17 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.

இதற்கு முன்னர் நடைபெற்ற 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் குருநாகல் மலியதேவவும் கண்டி மஹமாயாவும் மோதின.

இரண்டு அணிகளும் சடுமையாக மோதிக்கொண்ட அப் போட்டியில் மஹமாயா 34 - 30 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தைப் பெற்றது.

முதலாவது ஆட்ட நேர பகுதியை மலியதேவ 9 - 8 என தனதாக்கியது. ஆனால் இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 9 - 7 என தனதாக்கிய மஹமாயா இடைவேளையின்போது 17 - 16 என முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்ட நேர பகுதியை மலியதேவ 8 - 7 என தனதாக்கியதும் கோல்கள் நிலை 24 - 24 என சமம் அடைந்தது,

எனினும் கடைசி ஆட்ட நேர பகுதியில் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய   மஹமாயா அப் பகுதியை 10 - 6 என தனதாக்கி 34 - 30 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தைப் பெற்றது.

இந்த சுற்றுப் போட்டியில் எஸ். காரியவசம் (நெட் சாம்ப்ஸ்) சிறந்த கோல் போடும் விராங்கனையாகவும் ஏ. தேவசிங்க (நெட் சாம்ப்ஸ்) சிறந்த மத்திய கள வீராங்கனையாகவும் காவிந்தி அத்தாவுட (ஹில்வூட்) சிறந்த தடுத்தாடும் வீராங்கனையாகவும் தெரிவாகி விருதுகனை வென்றெடுத்தனர்.

வலைபந்தாட்ட ராணியாக சீ. நீஷா (நெட் சாம்ப்ஸ்) முடிசூட்டப்பட்டார்.

டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் குறியீடு மற்றும் ஊடகப் பிரிவு உதவித் தலைவர் ஹர்ஷா சமரநாயக்க பிரதம அதிதியாகவும் முன்னாள் தேசிய பயிற்றுநர்களான ஹயசிந்த் விஜேசிங்க, திலகா ஜினதாச ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர். இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவி விக்டோரிய லக்ஷ்மியும் பரிசல்களை வழங்கினார்.

கனிஷ்ட தேசிய வலைபந்தாட்ட சுற்றப் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பூரண அனுசரணை வழங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10