பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு திட்டங்களை முன்வைக்கலாம் ; யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதம்

Published By: Vishnu

18 Feb, 2024 | 10:02 PM
image

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வெள்ளிக்கிழமை (18) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போது, குறித்த திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதோடு குறித்த விடயம் தொடர்பில் உரிய பதில் வழங்குமாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக வரவுசெலவு திட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்கள் எதனையும் பெற்றுகொள்ளாது  திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது இது யாரால் செய்யப்பட்டது? எவ்வாறு இந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டது?  தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கேள்வியெழுப்பப்பட்டது  இதனையடுத்து அமைச்சர் குறித்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி திட்டங்கள் தெரிவுசெய்வதாகத் தெரிவித்ததையடுத்து அடுத்த விடயம் ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு நிர்பாசன அமைச்சருமான ஜீவன்தொண்டமான்  உட்பட சிவஞானம் சிறிதரன் ,எம்.ஏ சுமந்திரன்,கயேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன், அங்கயன் இராமநாதன் மற்றும்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், பொலிசார் முப்படையினர்  பொதுஅமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34