ராஜபக்சர்களுடன் எங்களுக்கு எந்த வித டீலும் இல்லை. மக்களுடனே எங்களுக்கு டீல் உள்ளது - சஜித்

Published By: Vishnu

18 Feb, 2024 | 09:07 PM
image

ஏனைய தலைவர்களுடன் ஒப்பிடும் போது தனக்குப் பொய்யான பேச்சும், முகஸ்துதியும் கிடையாது எனவும், நாட்டுக்கு தேவையான ரூபாக்கள் மற்றும் டொலர்களை ஈட்டும் வழிமுறையே தன்னிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாடாக நாம் 90 பில்லியன் டொலர் கடன் பட்டுள்ளோம். இந்தக் கடனிலிருந்து விடுபட ஏற்றுமதி சார்ந்த அபிவிருத்தி அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆடைத் தொழிற்சாலைகளைக் கூட எரித்த கபட அரசியலே நாட்டில் இருப்பதாகவும், பாடசாலைகளுக்குப் பேரூந்துகளை வழங்கும் போது, பஸ் மேன் என்று பெயர் சூட்டினர் என்றும் அவர் தெரிவித்தார். இவை அரசியல் கபட நாடகங்கள்,எதிர்க்கட்சியில் உள்ள வாய்  வீறாடிகளுக்கு முடிந்தால் தம்மோடு சரிசமமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வருமாறும், அவர்களைப் போல் வெறும் வாய்ப்பேச்சால் வீராப்பு பேச நேரமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 101 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, நிகவெவ அணுர மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டாலும் இது தேர்தல் வருடமாகும்

ஜனாதிபதி தேர்தலை நடத்த தற்போதைய ஜனாதிபதிக்கு விரும்பவில்லை என்றாலும், இது தேர்தல் வருடம். இங்கு மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்கள் இவ்வாறு சரியான தீர்மானம் எடுத்தால் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இடது சாரியோ,வலது சாரியோ, நாட்டுக்கு டொலர்களே தேவை

இடதுசாரியாக இருந்தாலும் சரி, வலதுசாரியாக இருந்தாலும் சரி எந்த கட்சிக்கு டொலரையும் ரூபாவையும் ஈட்ட  முடியாதோ, அந்த கட்சி பயனற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்து நாட்டிலும் திருடிய அரசாங்கம்

மல உர மோசடி, நானோ உர மோசடி என அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருமளவு பணத்தை ஏமாற்றித் திருடியுள்ளனர். வங்குரோத்தான நாட்டில் உரத்தில் ஏமாற்றி திருடிய அரசாங்கமே நாட்டை ஆண்டு வருகிறது. எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி  நீதிமன்றத்திற்குச் சென்று அவற்றை வெளிக்கொணர்ந்தது, இதனை பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்சர்களுடன் எங்களுக்கு எந்த வித டீலும் இல்லை

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், ஒரு குடும்பம் அதன் கௌரவத்தைப் பெற்று நாட்டை முழுமையாக எழுதி எடுத்துக் கொண்டவர்கள் போலப் பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கினர். தான் ராஜபக்சர்களுடன் டீல் போட்டதில்லை என்றும், போட போறதும் இல்லை. மக்களுடன் மாத்திரமே தனக்கு டீல் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58