(எம்.வை.எம்.சியாம்)
அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரச வங்கிகள் தேசிய வளமாக பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் இதன்போது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கொண்டு நடத்தல் தொடர்பான பல விடயங்களை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், இந்த அரச வங்கிகள் தேசிய வளமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்துக் கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் ஓரளவு மீண்டிருப்பதால் முக்கியமான வங்கிகளை எப்படியேனும் பாதுகாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது இன்னும் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும். பல பாரிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தான் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுத்ததால் தான் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. அதை தனியார் நிறுவனத்திற்கு விற்பதுதான் ஒரே வழி என்பவையெல்லாம் புனையப்பட்ட கதைகள்.இதுபோன்ற கதைகளில் நாம் ஏமாறாமல் இந்த மூன்று வங்கிகளிலும் சிறப்பான முறையில் தலையிட வேண்டும்.
பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. 3500 அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் எந்த விதத்திலும் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படமாட்டாது. இது அரசாங்கத்தின் முடிவு. அந்தப் பகுதிகள் படிப்படியாக வனப் பாதுகாப்பிற்கு விடுவிக்கப்படும்.
தற்போது நாம் இணங்கியுள்ள சர்வதேச காலநிலை மாற்ற உடன்படிக்கையின் படி மூவாயிரம் அடிக்கு மேல் உள்ள தோட்டங்களைக் குடியிருப்பாளர்கள் இன்றியே வைத்திருக்க முடியும்.
இதுபோன்ற உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு என்ன செய்வது என்று இந்த நாட்களில் கலந்துரையாடப்படுகிறது. பெருந் தோட்டங்களில் 143,000 வீட்டு உரிமையாளர்களே உள்ளனர். ஏனையவர்கள் தோட்டங்களில் வசிக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM