கருப்பையக புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் பிரத்யேக கதிர்வீச்சு சிகிச்சை

17 Feb, 2024 | 05:26 PM
image

லகளவில் ஆண்டுதோறும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்மணிகள் எண்டோமெட்ரியம் எனும் கருப்பையக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது என்றாலும், பெண்மணிகளிடத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு முழுமையாக ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணின் இடுப்பு பகுதியிலும் அமைந்திருப்பது தான் எண்டோமெட்ரியம் எனும் கருப்பையகம்.‌ இதில் தான் கருமுட்டை உற்பத்தியாகிறது. பல்வேறு காரணங்களால் இத்தகைய கருமுட்டையின் உற்பத்தியின் போது உருவாகும் செல்களில் அசாதாரண வளர்ச்சி ஏற்படும்போது அங்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் இத்தகைய புற்றுநோய் பாதிப்பு தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுகிறது. ஏனெனில், இவை அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு ஏற்படும் ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிடாய், மாதவிடாய் காலகட்டத்திற்கு இடையே ஏற்படும் இரத்தப்போக்கு, இடுப்பு வலி... ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக புற்றுநோய் மருத்துவ நிபுணரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களிடத்தில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனின் உற்பத்தி, செயல்திறன், இயங்கு திறனில் சம சீரற்ற தன்மையை ஏற்படுவதாலும், அதிக காலம் மாதவிடாய் ஏற்படுவதாலும், கருத்தரிக்காமல் இருந்தாலும், முதுமையின் காரணமாகவும், உடற்பருமன் காரணமாகவும், மார்பக புற்றுநோயின்போது ஹோர்மோன் தெரபி எனும் சிகிச்சையை மேற்கொள்வதால் உண்டாகும் பக்க விளைவின் காரணமாகவும், இன்னும் விவரிக்கப்படாத பரம்பரை மரபணு குறைபாட்டின் காரணமாகவும் இத்தகைய புற்றுநோய் ஏற்படுகிறது.

இதன்போது பெல்விக் எனப்படும் இடுப்பு பகுதி, என்டோமெட்ரியம் எனப்படும் கருப்பையக பகுதி ஆகியவற்றில் அல்ட்ரா சவுண்ட், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டும், திசு பரிசோதனைகளை மேற்கொண்டும் இத்தகைய பாதிப்பினை துல்லியமாக அவதானிக்கலாம்.

புற்றுநோய் தொடக்க நிலையில் இருந்தால் அதனை சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக நிவாரணத்தை வழங்கலாம். சிலருக்கு புற்றுநோய் பாதிப்பின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையாக இருந்தால் அவர்களுக்கு ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை அவசியமாகும். இதன் போது இரண்டு வகையினதான முறையில் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெல்விக் பகுதி முழுவதும் சிலருக்கு வழங்கலாம். சிலருக்கு கருப்பையகத்தின் உள்பகுதியில் மட்டும் பிரத்யேகமாக கதிர்வீச்சு சிகிச்சையை வழங்கலாம். இந்த இரண்டு விதமான கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. சிலருக்கு மட்டும் அப்பகுதியில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க கீமோதெரபி எனும் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய புற்றுநோய் வழக்கமான நிலைகளைக் கடந்து ஆபத்தான நிலையில் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மேற்கூறிய சிகிச்சை முறைகளுடன் ஹோர்மோன் தெரபி, டார்கெடட் தெரபி, இம்யூனோ தெரபி போன்ற நவீன சிகிச்சை முறைகளும் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு நிவாரணம் அளிப்பார்கள்.

- டொக்டர் ப்ரீத்தி

தொகுப்பு : அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்