திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும், அவர்களுக்குரிய மந்திரங்களும்

17 Feb, 2024 | 04:39 PM
image

திதி நித்ய தேவதைகளைப் பற்றிய கட்டுரை எம்முடைய இணையத்தளத்தில் வெளியானது. ஏராளமான வாசகர்கள் திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளைக் குறித்தும், அந்தந்த தேவகைளுக்குரிய மந்திரங்களையும் அதாவது திதி நித்ய தேவதைகளை வணங்கும் போது உச்சரிக்கவேண்டிய மந்திரங்களையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறையும், மந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை  முழுமனதுடன் கடைபிடித்து, நாளாந்தம் ஒவ்வாரு பணியினை மேற்கொள்ளும் தேவதைகளை வணங்கி, அவர்களின் அருளைப் பெற்று வாழ்க்கையில் ஒளிர்வோம். 

காமேஸ்வரி தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லின்னாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.” 

இந்த மந்திரத்தை காமேஸ்வரி நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக்கொண்டே பிரார்த்தித்தால்,  மகிழ்ச்சி, தன வரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை சாத்தியமாகும். 

பகமாலினி தேவதைக்குரிய மந்திரம் :

“ஓம் பகமாலின்யை வித்மஹே ஸர்வ வஸங்கர்யை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை பகாலினி நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே பிரார்த்தித்தால், கருவிலுள்ள சிசுவிற்கு எந்த ஆபத்தும் நேராமல், சுகபிரசவம் உள்ளிட்ட ஏராளமான சுப பலன்கள் கிடைக்கும். 

நித்யக்லின்னை தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே நித்ய மதத்ரவாய தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை நித்யக்லின்னை நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே பிரார்த்தித்தால், குடும்ப ஒற்றுமையும், கணவன் மனைவி இடையேயான ஒற்றுமையும் மேலோங்கும்.  வீண் தகராறுகள் வருவது குறைந்து மன நிம்மதி கிடைக்கும். 

பேருண்டா நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை பேருண்டா நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே மனமுருக பிரார்த்தனை செய்தால், ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வதுடன், அதிலிருந்து மீளலாம். எல்லா வளங்களையும் பெறலாம். 

வந்நிவாஸினி தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் வஹ்னிவாஸின்யை வித்மஹே ஸித்திப்ரதாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை வந்நிவாஸினி நித்ய தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே வேண்டினால், நாட்பட்ட நோய்கள் அகலும், அகமும், முகமும்,தேஜுடன் திகழ்வீர். உலகளாவிய இன்பங்களை உய்த்துணர இயலும்.

மஹா வஜ்ரேஸ்வரி தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே வஜ்ர நித்யாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.”

இந்த மத்திரத்தை மஹா வஜ்ரேஸ்வரி நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே பிரார்த்தித்தால், அனைத்து வகையினதான துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைத்து? நிம்மதி அடைவீர். 

சிவதூதி தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் சிவதூத்யை வித்மஹே சிவங்கர்யை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை சிவதூதி நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே பிரார்த்தனை செய்தால், எமக்கு எதிரான அநீதி அழியும், எமக்கு எதிராக தீட்டப்பட்ட திட்டங்கள் பொடீபொடியாக அழியும்.  எம்முடைய நியாயமான வேண்டுகோள்நிறைவேறும்.  எளிதில் ந்த ஆபத்தும் வராது. 

த்வரிதா நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் த்வரிதாயை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை த்வரிதா நித்யா தேவதையை வணங்க வேண்டிய திதிகளில் உச்சரித்துக் கொண்டே பிரார்த்தித்தால், பயம் விலகி, கலைகளில் தேர்ச்சிப் பெற்று, துணிச்சலுடன் அனைத்து சவால்களையும் எளிதாக எதிர்கெண்டு வெற்றிப் பெறலாம்.  ஆயுள் முழுவதுடன் ஆரோக்கியமாக வாழலாம். 

குலசுந்தரி நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் குலஸுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை தீமஹி

தன்னோ சக்தி ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை குலசுந்தரி நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், சர்வ ஞானத்தையும், அனைத்து வகையினதான செல்வங்களையும் பெறலாம். அடுத்தத் தலைமுறைக்கான சொத்தையும் சேர்க்கலாம். 

நித்ய நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே நித்யா நித்யாயை தீமஹி

தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை நித்ய நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், தொல்லைகள், இடையூறுகள், தடைகள் அனைத்தும் விலகும். அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும். அஷ்டமா சித்திகளையும் பெறலாம்.  

நீலபதாகா நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் நீலபதாகாயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை நீலபதாகா நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறலாம். மாணவ மாணவிகளாக இருந்தால், அவர்கள் எழுதும் தேர்வுகளில் சித்தி பெற்று அதிக பெறுபேறுகளை பெறுவர்.

விஜயா நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் விஜயா தேவ்யை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை விஜயா நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், அனைத்து வகையினதான வழக்குகளிலும் சாதகமான பலன்களைப் பெறலாம்.  கலைகளிலும் தேர்ச்சிப் பெற்று மிளிரலாம். 

ஸர்வமங்களா நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே சந்த்ராத்மிகாயை திமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை ஸர்வமங்களா நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், பயணங்களின் போது எந்தவித ஆபத்தும் ஏற்படாது. அனைத்துவித மங்கள பாக்கியங்களையும் பெறலாம். 

ஜ்வாலாமாலினி நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே மஹாஜ்வாலாயை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை ஜ்வாலாமாலினி நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், பகைவர்கள் இடம்தெரியாமல் அழிந்துபோவர்.  அனைத்து விதமான துன்பங்களும் விலகி, நன்மை கிட்டும். 

சித்ராதேவி நித்யா தேவதைக்குரிய மந்திரம்:

“ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி

தன்னோ தேவிப்ரசோதயாத்.”

இந்த மந்திரத்தை சித்ராதேவி நித்யா தேவதையை வழிபட வேண்டிய திதிகளில் உச்சரித்தால், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பெரும் செல்வ வளம் கிடைக்கும்.

அதே போல் எம்முடைய வாசகர்கள் திதிகளில் வளர்பிறை, தேய் பிறை என இருப்பதால், நாங்கள் வணங்க வேண்டிய தெய்வங்களையும் பட்டியலிட்டு வழங்கிட வேண்டும் என்றார்கள். அதற்கேற்ப நீங்கள் வளர்பிறையில் வரும் திதிகளில் பிறந்திருந்தால்... கீழ்கண்ட தெய்வங்களை வணங்கி பலனைப் பெறலாம். 

 பிரதமை திதி  –  குபேரன் மற்றும் பிரம்மா

துவதியை திதி  – பிரம்மா

திரிதியை திதி – சிவன் மற்றும் கெளரி மாதா

சதுர்த்தி திதி –  எமன் மற்றும் விநாயகர்

பஞ்சமி திதி  – திரிபுர சுந்தரி

சஷ்டி திதி  – செவ்வாய் பகவான், முருக பெருமான்

சப்தமி திதி  – சப்த ரிஷிகள் மற்றும் இந்திரன்

அஷ்டமி திதி – காலபைரவர்

நவமி திதி –  சரஸ்வதி

தசமி திதி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்

ஏகாதசி திதி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

துவாதசி திதி – மகா விஷ்ணு

திரயோதசி திதி – மன்மதன்

சதுர்த்தசி திதி –  காளி

பௌர்ணமி திதி– லலிதாம்பிகை 

ஆகிய தெய்வங்களை வணங்கிடவேண்டும். 

நீங்கள் தேய்பிறை திதிகளில் பிறந்திருந்தால், கீழ்கண்ட தெய்வங்களை வணங்கி பலன் பெறலாம். 

பிரதமை திதி –  துர்க்கை

துவதியை திதி – வாயு பகவான் ( ஆஞ்சநேயர்)

திரிதியை திதி – அக்னி பகவான்

சதுர்த்தி திதி –  எமன் மற்றும் விநாயகர்

பஞ்சமி திதி – நாகதேவதைகள் (புற்றுக் கோயில்கள்)

சஷ்டி திதி – முருகன்

சப்தமி திதி – சூரியன்

அஷ்டமி திதி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை

நவமி திதி–  சரஸ்வதி

தசமி திதி – எமன் மற்றும் துர்கை

ஏகாதசி திதி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

துவாதசி திதி – சுக்ரன்

திரயோதசி திதி – நந்தி (பிரதோஷ வழிபாடு)

சதுர்த்தசி திதி  –  ருத்ரர்

அமாவாசை  திதி –பித்ருக்கள் மற்றும் காளி

ஆகிய தெய்வங்களை வணங்கிட வேண்டும். திதி நித்ய தேவதைகளை வணங்கும் போது, தாமரை மலர்கள், மாதுளம் பழங்கள் போன்றவற்றையும் வைத்து வணங்கலாம். 

தொகுப்பு சுபயோகதாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் திருமுல்லைவாயில்...

2024-04-18 17:30:19
news-image

தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருள் பாலிக்கும்...

2024-04-17 17:44:50
news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11