உலகளவில் லட்சம் மக்களில் பதினைந்து நபர்களுக்கு பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனப்படும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதற்கு தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை கண்டறியப்பட்டு பலனளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் என்பது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே ஆரோக்கியமான செல்களை பாதிக்கும் ஒட்டோ இம்யுன் டிசிஸ்ஸாகும். இத்தகைய நோய் தாக்கத்தின் போது எம்முடைய பித்த நாளங்கள் வீக்கம் அடைந்து மெதுவாக அழிக்கப்படுகின்றன. இது நாட்பட்ட கல்லீரல் பாதிப்பாக உருவாகி கல்லீரல் செயலிழப்பிற்கு காரணமாகிறது.
எம்முடைய கல்லீரலிலும் பித்தம் எனும் திரவம் உற்பத்தியாகிறது. இது செரிமானத்திற்கும், வயிற்றுப் பகுதியில் சில விற்றமின்களை உட் கிரகிப்பதற்கும் உதவி செய்கிறது. மேலும் நச்சுகள் மற்றும் செயலிழந்த ரத்த சிவப்பணுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு கோலாங்கிடிஸ் எனப்படும் சேதம் ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் திசுக்களில் பாதிப்பை உண்டாக்கி லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்க பாதிப்பிற்கும், கல்லீரல் செயலிழப்பிற்கும் காரணமாகிறது.
இத்தகைய பாதிப்பு இரு பாலினத்தவர்களையும் பாதிக்கும் என்றாலும், ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. மேலும் பாரம்பரிய மரபணு மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இத்தகைய நோய் பாதிப்பு எம்முடைய உடலில் துண்டப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இயல்பை விட அதிக சோர்வு, தோல் அரிப்பு ஆகிய இரண்டு அறிகுறிகள் முதன்மையானது என்றாலும்.., வாய் மற்றும் கண் பகுதியில் ஏற்படும் வறட்சி, வயிற்றின் வலது புற மேல் பகுதியில் ஏற்படும் வலி, மண்ணீரல் வீக்கம், எலும்பு, தசை, மூட்டு ஆகிய பகுதிகளில் வலி, கணுக்கால் வீக்கம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், முழங்கை அல்லது முழங்கால் மடிப்புகளில் பிரத்யேக கொழுப்பு படிவுகள், ஹைபர் பிக்மென்ட்டேசன், ஒஸ்டியோபோரோசிஸ், பிரத்யேக வயிற்றுப்போக்கு, ஹைபோ தைரொய்டிசம், திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். மேலும் மருத்துவர்கள் கல்லீரல் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, ஃபைப்ரோ ஸ்கேன் எனப்படும் பிரத்தியேக கல்லீரல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, MRCP, MRE எனப்படும் எம் ஆர் ஐ பரிசோதனை, கல்லீரல் திசு பரிசோதனை... ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். வெகு சிலருக்கு மட்டும் கல்லீரல் செயலிழப்பு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் கோபால்சாமி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM