கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி  கடந்த 4 ஆம் திகதி கவனஈர்ப்புபோராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

குறித்த போராட்டம்  இன்று எட்டாவது  நாளாகவும்  தொடர்கின்றது. 

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இது வரை  அரசிடமிருந்து கிடைக்காததினாலே  போராட்டத்தில்  ஈடுபட்டு வருவதாகவும்,  இதற்கு முடிவு வரும்வரை  போராட்டம் தொடரும் எனவும்  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மக்கள்  தெரிவித்துள்ளனர்.