யுக்திய நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான வாகனங்களைப் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிய வாகனங்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அவகாசம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வாகனங்களைக் கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்திருந்தார்..
கடந்த வருடம் டிசம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான "வெலிவிட்ட சுதா" என்பவரின் சகோதரிக்குச் சொந்தமான ஐந்து சொகுசு பஸ்கள், நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றிக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM