முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அழகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கோரப்பட்ட நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கடுமையான எதிர்ப்பையடுத்து குறித்த அனுமதியை அபிவிருத்திக்குழு நிராகரிப்பதாகத் தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த அனுமதி இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால் அருகே உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்படுமெனவும், செம்மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர்த் தடுப்பணையும் சேதப்படுத்தப்படுமெனவும், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்காத விடயத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாதெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.
இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இந்த அனுமதிக் கோரிக்கையை நிராகரிப்பதாக முடிவெடுத்ததுடன், இல்மனைட் அகழ்வால் ஏற்படும் பாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி உரியவர்களுக்குஅறிக்கை அனுப்புவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM