செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு மூளையில் உள்ள ரத்த நாள அடைப்பு பாதிப்புக்குரிய சிகிச்சை

16 Feb, 2024 | 08:22 PM
image

பார்வைத் திறனில் தடுமாற்றம் உள்ள சில நோயாளிகளுக்கு செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நவீன மருந்தியல் சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக பக்கவாத பாதிப்பு மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு அல்லது ரத்த உறைவு காரணமாக ஏற்படுகிறது. இதன் போது மருத்துவர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு மூளையில் உள்ள எம் மாதிரியான ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதையும், எம்மாதிரியான ரத்த நாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் துல்லியமாக அவதானிக்கிறார்கள்.

பொதுவாக மூளையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் அப்பகுதியில் விவரிக்க இயலாத அழுத்தம் ஏற்படுகிறது. இவை கண்களில் பின்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவர்கள் கண்களில் உள்ள நரம்புகளை பரிசோதித்து Papilledema எனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. மூளையின் வெனஸ் எனும் தூய்மையற்ற ரத்த நாளப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவதானிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பை மேலும் துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்ள மூளைப்பகுதியில் MRI with MRV மற்றும் Atico MRI போன்ற நவீன பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். மேலும் இத்தகைய பரிசோதனைகளில் எதன் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் மருத்துவர்கள் அவதானிப்பார்கள். பிறகு பாதிப்பிற்கேற்ப பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.‌ சிலருக்கு ஆறு மாத காலமும், வேறு சிலருக்கு ஒரு வருட காலமும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மேலும் மருந்தியல் சிகிச்சையை ஊசி மூலமாகவும், மாத்திரை மூலமாகவும் நோயாளியின் உடல் நிலையை பொறுத்து வழங்கி இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் வழங்குவர்.

வைத்தியர்  வேணி - தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29