எம்மில் பலரும் தங்களது உழைப்பை பெரிதாக மதித்து வாழ்க்கையில் முன்னேறவே விரும்புவர். ஆனால் எம்முடைய அனுபவத்தில் பலரும் கடினமாக உழைத்தும் தன்னிறைவு அடைவதில்லை. வறுமை கோட்டுக்கு கீழேயே தொடர்ந்து பயணிப்பர். வேறு சிலர் கடினமாக உழைக்காமல், புத்திசாலித்தனமாக உழைத்து, அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வருவாயை ஈட்டி அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்திடுவர். இந்த முரண்பாடு அவர்களின் ஜாதகத்தில் உள்ளது.
குறிப்பாக, அவர்கள் எந்த திதியில் பிறந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் செல்வ வளம், பொருளாதார பற்றாக்குறை, பொருளாதார தன்னிறைவு போன்றவை கணக்கிடப்படுகிறது. எம்முடைய பஞ்சாங்கத்திலும் திதிக்கு எம்முடைய முன்னோர்கள் முதன்மையான ஸ்தானத்தை வழங்கி அதனுடைய முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார்கள். அதனால் ஜோதிடத்தில் பல வித பரிகாரங்களை மேற்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையென்றால்... உங்களுடைய ஜாதகத்தில் நீங்கள் எந்த திதியில் பிறந்திருக்கிறீர்களோ, அந்த திதிக்குரிய தேவதைகளையும், அந்த திதிக்குரிய தெய்வங்களையும் தொடர்ந்து வணங்கி வந்தால், திதிக்குரிய சூட்சமம் இயங்கி உங்களுக்குரிய பலன்களை வழங்கி, உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.
எம்முடைய முன்னோர்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு திதியிலிருந்து வளர்பிறை, தேய்பிறை என பதினைந்து திதிகளை பட்டியலிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு திதிக்குரிய திதி நித்ய தேவதைகளையும், அந்த திதியில் வணங்க வேண்டிய தெய்வங்களையும் வரிசைப்படுத்தி தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து வணங்கி.. இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய எமக்கான பலன்களை பெறுவோமாக...!
திதி நித்ய தேவதைகளின் திருவுருவங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதனை பதிவிறக்கம் செய்து உங்களது செல்போனில் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துக்கொண்டு அதனை அடிக்கடி கண்டு வருவது... உங்களுகளுக்குப் பலன்கள் கிடைப்பதற்கான வழிமுறை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
திதி நித்ய தேவதைகள்
தேய்பிறை அமாவாசை திதி, வளர்பிறை பிரதமை திதி - ஸ்ரீ காமேஷ்வரி நித்யா
துவிதியை திதி, தேய்பிறை சதுர்த்தசி திதி- பஹமாலினி நித்யா
திரிதியை திதி, தேய்பிறை திரயோதசி திதி - நித்யக்லின்னை நித்யா
சதுர்த்தி திதி, தேய்பிறை துவாதசி திதி - பேருண்டா நித்யா
பஞ்சமி திதி, தேய்பிறை ஏகாதசி திதி - வந்நிவாசினி நித்யா
சஷ்டி திதி, தேய்பிறை தசமி திதி - மஹாவஜ்ரேஸ்வரி நித்யா
சப்தமி திதி, தேய்பிறை நவமி திதி - சிவதூதி நித்யா
அஷ்டமி திதி, தேய்பிறை அஷ்டமி திதி- த்வரிதா நித்யா
நவமி திதி, தேய்பிறை சப்தமி திதி - குலசுந்தரி நித்யா
தசமி திதி, தேய்பிறை சஷ்டி திதி - நித்ய நித்யா
ஏகாதசி திதி, தேய்பிறை பஞ்சமி திதி - நீலபாதகா நித்யா
துவாதசி திதி, தேய்பிறை சதுர்த்தி திதி - விஜயா நித்யா
திரயோதசி திதி, தேய்பிறை திருதியை திதி - ஸர்வமங்களா நித்யா
சதுர்த்தசி திதி, தேய்பிறை துவிதியை திதி - ஜ்வாலாமாலினி நித்யா
பௌர்ணமி திதி, தேய்பிறை பிரதமை திதி - சித்ராதேவி நித்யா
மேற்கூறிய திதி நித்ய தேவதைகளை வணங்கி வந்தால், பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
ஜோதிடத்தில் விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்பதும் உண்டு. ஆகவே நல்ல காரியங்களை தொடங்குவதற்கும்.. நல்ல காரியங்களை தொடங்காமல் இருப்பதற்குமான திதி தொடர்பான விடயங்களையும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
வெற்றி தரும் திதிகளும் கிழமைகளும்
ஞாயிற்றுக்கிழமையும் அஷ்டமி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்...
திங்கட்கிழமையும் நவமி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்...
செவ்வாய்க்கிழமையும் சஷ்டி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்..
புதன்கிழமையும் திருதியை திதியும் இணைந்து வரும் நாட்களிலும்..
வியாழக்கிழமையும் ஏகாதசி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்...
வெள்ளிக்கிழமையும் திரயோதசி திதியும் இணைந்து ஒரு நாட்களிலும்..
சனிக்கிழமையும் சதுர்தசி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி உறுதியாக கிடைக்கும்.
தவிர்க்க வேண்டிய திதிகளும் கிழமைகளும்
ஞாயிற்றுக்கிழமையும் சதுர்த்தசி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
திங்கட்கிழமையும் சஷ்டி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
செவ்வாய்க்கிழமையும் சப்தமி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
புதன்கிழமையும் துவிதியை திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
வியாழக்கிழமையும் அஷ்டமி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
வெள்ளிக்கிழமையும் நவமி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
சனிக்கிழமையும் சப்தமி திதியும் இணைந்து வரும் நாட்களிலும்
எந்த காரியங்களை செய்தாலும் வெற்றி கிடைக்காது. தோல்வி உறுதி. ஆகவே இந்த நாட்களிலும், இந்த திதியையும் நாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு.. அதாவது புதிய காரியங்களை தொடங்குவதை தவிர்த்து விட்டு நாளாந்த கடமைகளை மட்டும் இறைவனின் பெயரால் தொடங்கி தொடர்ந்து நடத்தி வர வேண்டும்.
திதிகளில் வழிபட வேண்டிய தெய்வங்கள்
பிரதமை திதியில் அக்னி பகவானை வழிபட வேண்டும். இந்த திதியில் ஆலயங்களில் நடைபெறும் கேள்விகளில் பங்குபற்றி அந்த யாகங்களுக்கு சமித்துகள் வாங்கித் தரலாம். அதே தருணத்தில் ஆலயங்களில் இயங்கும் மடப்பள்ளி எனப்படும் உணவு தயாரிப்பு கூடத்திற்கு அடுப்புகள் அதாவது கேஸ் ஸ்டவ், எரிவாயு உருளை கொண்டவற்றை வாங்கித் தந்தால்.. உங்களுக்கு பிரதமை திதி செயல்பட தொடங்கி லாபத்தை அள்ளி அள்ளி தரும்.
துவிதியை திதியில் பிரம்மாவை வழிபட வேண்டும்.
திரிதியை திதியில் கௌரியை (சிவ பத்தினி - மகேஸ்வரி) வழிபட வேண்டும்.
சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். (பிள்ளையார் பட்டி)
பஞ்சமி திதியில் நாக தேவதைகளை வழிபட வேண்டும். அருகில் உள்ள புற்றுக் கோயில்களை வணங்கலாம்.
சஷ்டி திதியில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும். திருச்செந்தூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஜெயந்தி நாதரை வழிபட வேண்டும்.
சப்தமி திதியில் சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய நமஸ்காரம், யோகா போன்றவற்றையும் பின்பற்றலாம்.
அஷ்டமி திதியில் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
நவமி திதியில் சூரிய பகவானையும், துர்க்கை அம்மனையும் வழிபட வேண்டும். ஆதித்ய ஹிருதயத்தை பாராயணம் செய்யலாம்.
தசமி திதியில் சரஸ்வதியை வழிபட வேண்டும். சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்யலாம்.
ஏகாதசி திதியில் குபேரனை வழிபட வேண்டும்.
துவாதசி திதியில் திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளை வணங்க வேண்டும்.
திரியோதசி திதியில் காமதேனுவை வழிபட வேண்டும். பசுமாட்டினையும், கோசாலையில் உள்ள பசுக்களையும் வணங்கி வந்தால் நலம் பயக்கும்.
சதுர்த்தசி திதியில் ருத்ரன் மற்றும் கால பைரவரை வணங்க வேண்டும்.
பௌர்ணமி திதியில் வருணன் மற்றும் நிலா வழிபாடு மேற்கொள்ள வேண்டும். சத்திய நாராயணா வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
அமாவாசை திதியில் பித்ருக்கள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
திதி தொடர்பான மேலே சொல்லப்பட்ட விடயங்களை கவனமாக பின்பற்றி வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியை பரவச் செய்யுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM