எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளியை உருவாக்கும் கருவியை சட் ஜிபிடியை (ChatGPT) உருவாக்கி ஓபன் ஏஐ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு சோரா என யெரிடப்பட்டுள்ளது. சோரா என்ற ஜப்பானிய சொல்லுக்கு வானம் என அர்த்தம்.
இதன்மூலம், எழுத்துரு ஆவணத்தில் வழங்கப்படும் விடயம் மற்றும் வடிவம் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஒரு நிமிடத்தில் யதார்த்தபூர்வமான காட்சிகளை உருவாக்க முடியும்.
மனதிலுள்ள ஒரு படத்தின் அடிப்படையில் ஒரு காணொளியை உருவாக்கலாம் அல்லது புதிய உள்ளடக்கத்துடன் இருக்கும் காட்சிகளை நீடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சோராவை ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணொளி படைப்பாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓபன் ஏஐ சேவை விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளை சோராவின் பின்புலத்தில் இருந்து "சிவப்பு குழு" வல்லுநர்கள் சோதனை செய்வார்கள்.
அதாவது, "தீவிர வன்முறை, பாலியல் உள்ளடக்கம், வெறுக்கத்தக்க படங்கள், பிரபலங்களின் தோற்றம் அல்லது மற்றவர்களின் ஐபி" போன்றவற்றை தடைசெய்யும்.
சோராவை ஆராய்ச்சியாளர்கள், காட்சி கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். காணொளிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதைக் உறுதிப்படுத்த ஒரு வாட்டர்மார்க் உள்ளது என நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM