(நெவில் அன்தனி)
ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தன. நியூஸிலாந்தின் ஒரே ஒரு தொடர் வெற்றி இன்றைய தினம் பதிவானது.
ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் அதிகூடிய வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அந்த இலக்கை அடைந்து வரலாறு படைத்தது.
267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நிதானத்துடன் குவித்த சதத்தின் உதவியுடன் வெற்றியை இலகுவாக்கிக்கொண்டது.
தனது 98ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் குவித்த 32ஆவது சதம் இதுவாகும்.
172ஆவது இன்னிங்ஸில் 32ஆவது சதத்தைக் குவித்ததன் மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்த வீரர் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றார்.
32 டெஸ்ட் சதங்களை ரிக்கி பொன்டிங் 172 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பொன்டிங் 176 இன்னிங்ஸ்களிலும் சச்சின் டெண்டுல்கர் 179 இன்னிங்ஸ்களிலும் பெற்றிருந்தனர்.
கேன் வில்லியம்சனுக்கு பக்க பலமாகத் துடுப்பெடுத்தாடிய வில் யங் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 157 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டதாக அமைந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து பெற்ற 269 ஓட்டங்களே அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களைப் பெற நியூஸிலாந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 235 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் திறமையாக துடுப்பெடுத்தாடிய டேவிட் பெடிங்ஹாம் தனது கன்னிச் சதத்தை பெற்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம் ஓ'ரூக் 93 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைபற்றியதன் மூலம் நியூஸிலாந்து சார்பாக அறிமுக வீரராக அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த வீரரானார்.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் போட்டியாகவும் இது அமைந்ததால் நியூஸிலாந்தின் 2 வெற்றிகளுக்கு 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.
முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து, 261 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
2ஆவது போட்டி எண்ணிக்கை சுருக்கம்
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 242 (ருவான் டி ஸ்வாட் 64, டேவிட் பெடிங்ஹாம் 39, ஷோன் வொன் பேர்க் 38, வில்லியம் ஓ'ரூக் 59 - 4 விக்., ரச்சின் ரவிந்த்ரா 33 - 3 விக்.)
நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (கேன் வில்லியம்சன் 43, டொம் லெதம் 40, வில் யங் 36, டேன் பீட் 89 - 5 விக்., டேன் பீட்டர்சன் 39 - 3 விக்.)
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டேவிட் பெடிங்ஹாம் 110, கீகன் பீட்டர்சன் 43, நீல் ப்ராண்ட் 34, வில்லியம் ஓ'ரூக் 34 - 5 விக்., க்லென் பிலிப்ஸ் 50 - 2 விக்.)
நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 267) 2ஆவது இன்: 269 - 3 விக். (கேன் வில்லியம்சன் 133 ஆ.இ., வில் யங் 60 ஆ.இ., டொம் லெதம் 30, டேன் பீட் 93 - 3 விக்.)
ஆட்டநாயகன்: வில்லியம் ஓ'ரூக், தொடர் நாயகன்: கேன் வில்லியம்சன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM