வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டும் கொல்களம் கடந்த மூன்று தினங்களாக இயங்காததால் அங்கு பணிபுரியும் 15 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாட்டிறைச்சிக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமது பணிகளை மேற்கொள்வதற்கு இன்று கொல்களத்திற்குச் சென்ற தொழிலாளர்கள் கால்நடை வைத்திய அதிகாரி வருகை தந்திருந்தும் நகரசபை, சுகாதார பரிசோதகர்கள் சமுகமளிக்காததால் இன்றும் மூன்றாவது நாளாக பணி இடம்பெறவில்லை என்று தொழிலாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் 15 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாடு வெட்டும் தொழிலினை நம்பி குடும்பத்தினை நடாத்தி வருவதாகவும் கடந்த சில தினங்களாக வேலைக்குச் சென்றும் அங்கு அதிகாரிகளின் முரண்பாடு காரணமாக, அவர்களுக்குள்ளே உள்ள முரன்பாடுகளை வைத்து தொழிலாளர்களாகிய எமது வயிற்றில் அடித்துள்ளனர்.
இதனால் எமது பிள்ளைகள், மனைவிமார் பெரும் சிரமத்தில் தமது குடும்பங்களை நடாத்திக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் பணிகள் இடம்பெறவில்லை இன்றும் ஏமாற்றத்துடனே வீடு செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
மாடுகள் வெட்டும் கொல்களத்தில் பணி இடம்பெறமைக்கான காரணத்தினை வவுனியா நகரசபை செயலாளார் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, நகரசபை, சுகாதார பரிசோதர்கள் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டுள்ளதால் பணிக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மூன்று நாட்களாக வாவுனியா கொல்களம் தொடர்பான பிரச்சினை நீண்டு செல்வதால் வவுனியாவிலுள்ள மட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் இறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM