2023 இல் 99 பத்திரிகையாளர்கள் கொலை - 72 பேர் பாலஸ்தீனியர்கள் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு அறிக்கை

Published By: Rajeeban

16 Feb, 2024 | 01:01 PM
image

2023 இல் 99 பத்திரிகையாளர்கள் உலகநாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்துள்ளது.

காசாவில் இவ்வளவு பெருந்தொகையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் கடந்த வருடம் உலகில் கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை முன்னைய வருடங்களை விட குறைவாக காணப்பட்டிருக்கும் என  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுதெரிவித்துள்ளது.

காசா- இஸ்ரேல் யுத்தத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒருநாடொன்றில் ஒருவருடத்தில் கொல்லப்பட்டதை விட அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 77 பத்திரிகையாளர்களில் 72 பேர் பாலஸ்தீனியர்கள் மூவர் லெபனானை சேர்ந்தவர்கள் இருவர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என சிபிஜே தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களிற்கான அச்சுறுத்தல் என்ற விடயத்தை பொறுத்தவரை காசா யுத்தம் முன்னொருபோதும் இல்லாத அச்றுத்தலாக காணப்படுகின்றது என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஜோடி கின்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தை பொறுத்தவரை காசா பத்திரிகையாளர்களால் மாத்திரமே காசாவிற்குள் என்ன நடைபெறுகின்றது என்ற செய்தியை வெளியுலகிற்கு தெரிவிக்கமுடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள சிபிஜேயின் தலைவர் சர்வதேச பத்திரிiயாளர்களிற்கு காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் அழைத்துச்சென்றால் மாத்திரமே சர்வதேச பத்திரிகையாளர்களால் அங்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாங்கள் செய்திகளை வெளிக்கொணர்வதற்காக  தங்கள் உயிர்களை பணயம்வைக்கும்  பாலஸ்தீன பத்திரிகையாளர்களையே நம்பியிருக்கின்றோம் எனவும் ஜோடி கின்ஸ்பேர்க்தெரிவித்துள்ளார்.

காசா யுத்தத்தின் போது பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு போதிய ஆதரவின்மை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தம் என்பதால் காசாவில் இலக்குவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுபவர்களுக்கான ஆதரவை வெளியிட  மேற்குலகம் தயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் இஸ்ரேல் இந்த  யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச ஊடகங்கள் பிளவுபட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்தவருடங்களுடன் ஒப்பிடும்போது உக்ரைனிலும் மெக்சிக்கோவிலும் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 2023 இல் குறைவடைந்து காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக மெக்சிக்கோ பிலிப்பைன்ஸ் சோமாலியா காணப்படுவதாகவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46