தேர்தல்களில் நாங்களே வெற்றிபெறுவோம் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது ;அதன்காரணமாகவே இந்தியாவிற்கு அழைக்கப்பட்டோம் ; இந்தியாவின் பாதுகாப்பே இலங்கையின் பாதுகாப்பு - விஜிதஹேரத்

Published By: Rajeeban

16 Feb, 2024 | 10:58 AM
image

இந்தியாவிற்கான விஜயம் உண்மையாகவே  விசேடமானது,உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனைவரும்  மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளனர்,

மக்களின் ஆணையில்லாமல் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிவகிக்கின்றார்.

அவர் அரசமைப்பு நடைமுறை மூலம் மாத்திரம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சர்வதேச சமூகம் தேர்தலில் யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்பதை உணர்ந்துள்ளது இந்த சூழமைவிலேயே எங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் டெய்லிமிரருக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்

கேள்வி ; இந்தியாவின் பிராந்தியத்திற்கான பரந்துபட்ட நோக்கத்துடன் உங்கள் கட்சியின்கொள்கைகள் எவ்வாறு ஒத்துப்போகின்றன?

பதில் ; பிராந்திய பாதுகாப்பு என்பது இலங்கைக்கும் பொதுவான விடயம் நாங்கள் தேசிய பாதுகாப்பு இறைமை ஆள்புல ஒருமைப்பாடுஎன்பனவற்றை உறுதி செய்யவேண்டும் - பிராந்தியத்தில் மோதல் வெடித்தால் அதன் தாக்கம் இலங்கையிலும் உணரப்படும் இதன்காரணமாக நாங்கள் மிக உயர்மட்டத்தில் பிராந்திய பாதுகாப்பு என்ற விடயத்திற்குதயாராகவுள்ளோம்.

இந்திய தலைவர்கள் எங்களுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இலங்கை ஒருநாடு என்ற அடிப்படையில் பிராந்திய பாதுகாப்பு குறித்து அர்ப்பணிப்புடன் விளங்கும் அது எங்களின் கொள்கை.

எனினும் இந்த விடயத்தில் எடுக்கப்படவேண்டிய விசேடமான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் எதனையும் பேசவில்லை.

கேள்வி ; நீங்கள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தீர்கள் -ஒருமுறை இந்திய பிரதிநிதியொருவர் இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு என தெரிவித்திருந்தார்-இந்த கருத்து எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது?

பதில் ; நாங்கள் இதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்கின்றோம்.உக்ரைன் ரஸ்ய விவகாரத்தை அடிப்படையாகவைத்து இதனை பார்க்கலாம்.உக்ரைனில் இடம்பெறுவது ரஸ்யாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

நாங்கள் உக்ரைன் போல செயற்பட்டால் உலகில் வல்லரசுமோதலையே தூண்டுவோம்.

இந்தியா சீனா அமெரிக்க ஆகிய நாடுகள் உலகவல்லாதிக்க போட்டியில் ஈடுபட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

நாங்கள் இந்தமோதலில் ஒரு தரப்பின் பக்கம்சாய்ந்தால் உக்ரைனின் நிலைமையே எங்களிற்கும் ஏற்படும்.

இலங்கையில் உருவாகும் எந்த மோதலும் இந்தியாவை பாதிக்கும்,அதேபோன்று இந்தியாவில் இடம்பெறும் எந்தமோதலும் இலங்கையை பாதிக்கும்.

இந்தியாஇலங்கையின் பாதுகாப்பு என்பது ஒன்றுடன் ஒன்றுபின்னிப்பிணைந்த விடயம்.

இந்தியா போன்று சீனாவிற்கும் இலங்கையில் புவிசார் நலன்கள் உள்ளன -இலங்கை ஆட்சியாளர்களிற்கு இந்தியா சீனா மத்தியில் சமநிலை காண்பது என்பது கடினமான விடயமாக மாறியுள்ளது.

கேள்வி ; உங்கள் கட்சி சீனாவிற்கு நெருக்கமாக உள்ளது என மக்கள் கருதுகின்றனர்-இரண்டு நாடுகள் மத்தியிலான உறவுகளை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

பதில் ; நாங்கள் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியுடன் ஆரோக்கியமான உறவை பேணிவந்துள்ளோம்.இந்தியாவுடன் உறவுகளை பேணுவதற்கு இது தடையில்லை.

இந்தியா சீனா மோதல் எங்களிற்கு  தொடர்பற்ற ஒருவிடயம் இலங்கை  மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு இந்தியா சீனாவிடமிருந்து என்ன சிறந்த விடயத்தை பெற்றுக்கொள்ள முடியும் என நாங்கள் ஆராய்வோம்.

இந்தியா சீனா மோதலை எங்களிற்கான ஒரு விவகாரமாக மாற்றமாட்டோம்,இரண்டு நாடுகளிற்கும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம்.

கேள்வி ; தேசிய பாதுகாப்பை பொறுத்தவரை இந்தியாவை மையமாக கொண்ட அணுகுமுறை காணப்படுமா?

பதில் ; அப்படியொன்றும் இல்லை ஒரு நாட்டுடன் நெருக்கமாகயிருக்கின்றோம் இன்னொரு நாட்டுடன் நெருக்கமாகயில்லை என எவரும் தெரிவிக்க முடியாது.

நாங்கள் இலங்கையின் தேசிய நலன்களிற்கு முன்னுரிமைவழங்குவோம்.எந்த நாடாவாது ஆபத்தான செயலில் பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டால் நாங்கள் இலங்கையின் நலனை கருத்தில்கொள்வோம்.

கேள்வி ; ஒருநாட்டின் நலன்களிற்காக விட்டுக்கொடுப்புகளை செய்யமாட்டீர்கள் என்பது இதன் அர்த்தமா?

பதில் ; ஒரு நாட்டின் நலன்களிற்காக மற்றையை நாட்டின் நலன்களை விட்டுக்கொடுத்தமை எங்கள் நாட்டில் இடம்பெற்ற தவறாகும்.

திட்டங்களை வழங்கும்போது அவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றியுள்ளோம் நுரைச்சோலைமின்நிலைய திட்டம் சீனாவிற்கு வழங்கப்பட்டது - சம்பூர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

நாங்கள் அவ்வாறான கொள்கைகளை பின்பற்றப்போவதில்லை.

கேள்வி ; இந்திய விஜயம் குறித்த உங்களின் ஒட்டுமொத்த உணர்வு என்ன?

பதில் ; உண்மையாகவே இது விசேடமானது,உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனைவரும மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளனர்,

மக்களின் ஆணையில்லாமல் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிவகிக்கின்றார்.

அவர் அரசமைப்பு நடைமுறை மூலம் மாத்திரம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சர்வதேச சமூகம் தேர்தலில் யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்பதை உணர்ந்துள்ளது இந்த சூழமைவிலேயே எங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்..

கேள்வி ; கடந்தகாலங்களில் நீங்கள் இந்தியா குறித்து வேறு நிலைப்பாட்டை கொண்டிருந்தீர்கள்-இந்த விஜயத்தின் பின்னர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

பதில் ; அப்படியில்லை கடந்தகாலங்களில் இந்தியா எப்படி ஆட்சிசெய்யப்பட்டது என்பது எங்களிற்கு தெரியும்.தற்போது கற்றுக்கொள்வதற்கு புதிதாகஎதுவும் இல்லை.

கடந்தகால விடயங்களை பற்றிநீங்கள் கேள்வியெழுப்பினீர்கள் என்றால் அது அவ்வேளை உலக அரசியல் தொடர்புபட்ட விடயம்.

அவ்வேளை அமெரிக்கா ஒரு வல்லரசு ,ஜேஆர்ஜெயவர்த்தன அமெரிக்காவுடன் நெருக்கமானார்.

அதன் காரணமாக அவர் இந்தியாவின் அழுத்தங்களிற்கு பலியாகநேர்ந்தது,தற்போது வேறுநிலை காணப்படுகின்றது தற்போது சோவியத் ரஸ்யா இல்லை,அவ்வேளை இந்தியா சோவியத்ரஸ்யாவுடன் நெருக்கமாக காணப்பட்டது தற்போது உலக ஒழுங்குமாறிவிட்டது.

கேதமிழில் - ரஜீபன்ள்வி ; இந்தியா தொடர்பான உங்களின் தற்போதைய உங்கள் நிலைப்பாடு எண்ணம் குறித்து நான் கேட்கின்றேன்?

பதில் ; எங்கள் உறவு நெருக்கமடைந்துள்ளது இது இந்திய விஜயத்தின் பின்னர் இடம்பெற்றது இல்லை,இந்த விஜயம் எங்கள் மத்தியிலான பரஸ்பரபுரிந்துணர்வையும் மரியாதையையும் மேலும் அதிகரித்துள்ளது,இரண்டு நாடுகளாக நாங்கள் எவ்வாறு நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என்பதை நாங்கள்  கற்றுக்கொண்டுள்ளோம்.

தமிழில் - ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right