யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி வியாழக்கிழமை (15) புகையிரதத்தை மறித்து போராட்டமொன்றைப் பொதுமக்கள் முன்னெடுத்தனர்.
குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்தும் கடவை காப்பாளர் அவ்விடத்தில் தமது கடமையைச் செய்யவில்லை என குறிப்பிட்டும் பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
6:45 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்தை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பலத்த கோஷம் எழுப்பி பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயிரை காவு கொள்ளாதே!, தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் தாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பொதுமக்கள், கிராம மட்டத்தை சேர்ந்தவர்கள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM