மடகாஸ்கரில் இவ்வாரம் வீசிய இனாவோ சூறாவளியால் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மணிக்கு சுமார் ஐம்பது கிலோமீற்றர் வேகத்தில் சுழன்ற சூறாவளி மடகாஸ்கரின் வடகிழக்குக் கரையோர நகரங்களைத் தாக்கியது. மரங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தூக்கி வீசப்பட்டதுடன், மண்சரிவு, வெள்ளம் உட்படப் பல அனர்த்தங்களை இந்தச் சூறாவளி ஏற்படுத்தியது. தொடர்புகள் மற்றும் வீதிகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வீடுகளை இழந்து நிர்க்கதியானார்கள். 

சுமார் இரண்டு நாட்களாக வீசிய இந்தச் சூறாவளி வியாழனன்று வலுவிழக்க ஆரம்பித்தது. இந்த இரண்டு நாட்களுக்குள் மொத்தமாக சுமார் ஏழு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.