மனைவியும் மகளும் சமய நிகழ்வுக்கு சென்ற வேளை மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்த தந்தை 

Published By: Vishnu

15 Feb, 2024 | 09:12 PM
image

தந்தையொருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் விஷத்தை அருந்தக் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்குணுகொலபெலஸ்ஸ முறவசிஹேன பிரதேசத்தில் புதன்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

இதன்போது 50 வயதுடைய தந்தையும் 25 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

மகன் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இதன் காரணமாக சம்பவதினம் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மகனை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார் தந்தை.

இந்நிலையில், மனைவியும் மகளும் சமய  நிகழ்வொன்றுக்காக வெளியே சென்றிருந்த வேளையிலேயே தந்தை தனது மகனுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தியுள்ளார்.

மனைவியும் மகளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவனும் மகனும் விஷம் அருந்தியிருப்பதை அறிந்து அயலவர்களின் உதவியுடன் அங்குணுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

2025-12-07 09:25:55
news-image

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த...

2025-12-07 09:45:56
news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55