அமைதியாக இருந்து சாதித்து வருகிறாரா சிவகார்த்திகேயன்...!?

15 Feb, 2024 | 06:51 PM
image

சையமைப்பாளர் டி. இமானின் சொந்த வாழ்க்கையில் புயலைக் கிளப்பிய சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன், தொடர்ந்து மௌனத்தை பதிலாக அளித்து வருகிறார். இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் - சூரி இடையிலான நட்பு ரீதியான உறவிலும், விஷ விதையை விதைத்தவர் சிவகார்த்திகேயன் என்று ஒரு தரப்பினர் கூறி வருவதிலும், சிவகார்த்திகேயன் அமைதியாகவே இருந்து வருகிறார். 

திரையுலக பயணத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மௌனத்தை கடைபிடித்தாலும், அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று அவரை தொடர்ந்து உற்சாகத்தில் வைத்திருக்கிறது. அவரது பிறந்த நாள் பெப்ரவரி 17ஆம் திகதி என்பதால், அன்றைய தினத்தில் அவரும், முத்திரை பதித்த படைப்பாளியான ஏ. ஆர். முருகதாஸும் இணையும் படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகிறது.

இருப்பினும் ஏ.ஆர். முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்திருக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

மேலும், இந்தத் திரைப்படத்தில் 'துப்பாக்கி' படப் புகழ் வித் யூத் ஜாம்ப்வால் வில்லனாக நடிக்கக்கூடும். இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.‌ இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அயலான்' திரைப்படம் இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும், சிவகார்த்திகேயன் தற்போது 'உலகநாயகன்' கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்குபற்றி வருவதாகவும், இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அவரைப் பற்றி வெளியாகும் சர்ச்சைகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அமைதியாக இருந்து சாதிக்க வேண்டும் அல்லது இதுபோன்ற தர்ம சங்கடமான பிரச்சினைகளை கடந்து செல்லவே எண்ணுகிறார் என அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42
news-image

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்: முதல்வர்...

2024-12-11 17:04:15
news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23
news-image

பக்தி பாடல்களுக்கு முதல் முறையாக இசையமைத்த...

2024-12-10 11:58:52
news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24