தோட்டங்களில் வேலை செய்பவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்கி, பயிரிடப்படாத அரச தரிசு நிலங்களை அந்தந்த பகுதிகளுக்கேற்ப சிறு தேயிலை தோட்டங்களாக மாற்றி, இன்றைய தொழிலாளியை நாளைய தொழில் முனைவோராக்கும் செயற்றிட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும். இது தொழிலை விட வாழ்வாதாரம். இந்த நிலத்தில் தேயிலை தோட்டம் அமைந்திருப்பது போலவே வீட்டை நிர்மானித்து சிறந்த வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
'பிரபஞ்சம்' தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் 97ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் களுத்துறை, புளத்சிங்கள, மஹகம ஆரம்ப பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (14) கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தேயிலை உற்பத்தியில் 70 வீதமானது சுமார் 40 வீதமான காணிகளை வைத்திருக்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
60 சதவீதத்துக்கும் அதிகமான நில உடைமை கொண்ட பெரிய அளவிலான தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை உற்பத்திக்கு 30 சதவீத பங்களிப்பையே வழங்குகின்றன. சிறிய தேயிலை தோட்டங்களை ஊக்குவிப்பது என்பது தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதாகும்.
சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற திட்டங்களுக்கு தேவைப்பாடு ஏற்படாது.
அவர்களுக்கு சொந்த தேயிலை தோட்டத்தில் தேயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
தொலைநோக்குப் பார்வையுடனும் வேலைத்திட்டத்துடனும் இந்த சேவை மேற்கொள்ளப்படும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். சரியான விடயங்களைச் செய்ய வேண்டும். கல்வி, சுகாதாரம், வாழ்வுரிமை மற்றும் ஜீவனோபாயம் என்பன மனித உரிமைகளாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆரம்பப் பிரிவு பாடசாலையொன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM