இலங்கை மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின்  அறி க்கை என்பன  தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஜெனிவாவில்  எதிர்வரும்  22 ஆம் திகதி விபரமான அறிக்கை ஒன்றை  வெ ளியிட வுள்ளது.

குறிப்பாக  இம்முறை  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வையின் 34 ஆவது கூட்டத்  தொடரில்   இலங்கை  தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள  பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதற்கு  ஐரோப்பிய ஒன்றியம்  தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி  இலங்கை குறித்த விபர அறிக்கை ஒன்றை முன்வைக் கவுள்ளது. 

இதேவேளை நேற்று முன்தினம்  ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையின் அமர்வில் உரையாற்றிய  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி  மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் இலங்கை  மனித உரிமை விவகாரம் தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக   அறிவித்திருந்தார்.

அத்துடன் கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கை  தொடர்பான  எமது நிலைப்பாட்டை  விபரமான முறையில்  வெளிப்படுத்துவோம். இலங்கையானது 30/1 என்ற  ஜெனிவா பிரேரணையை  முழுமையாகவும் கால அட்டவணையின் அடிப் படையிலும்   அமுல்படுத்தவேண்டும் என்றும்    ஐரோப்பிய ஒன்றியத்தின்  பிரதிநிதி வலியுறுத்தியிருந்தார். 

மேலும்  இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் நடைபெற்றுவரும்  உபகுழுக் கூட்டங்களிலும் ஐரோப்பிய ஒன்றியத் தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு  உரையாற்றிவருகின்றமை குறிப் பிடத்தக்கது.