பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் சிறைத் தண்டனை !

15 Feb, 2024 | 09:36 PM
image

கொட்டக்கலை, வலப்பனை பிரதேசங்களில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர், முச்சக்கரவண்டி சாரதி ஆகிய இருவருக்கும் முறையே 17 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (14) மாலை தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய வழங்கியிருந்தார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது :

பாடசாலை மாணவி ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, கொட்டக்கலை பகுதியை சேர்ந்த 43 வயது பாடசாலை ஆசிரியருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த HCR/58/2019 என்ற இலக்கம் கொண்ட ஆசிரியரின் வழக்கில் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதன் பின்னரே, 17 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் முதல் குற்றச்சாட்டில் இவருக்கு மேல் நீதிமன்றம் விடுதலை வழங்கியது. அதை தொடர்ந்து, ஆசிரியர் மீது மேலும் இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவ்விரு குற்றச்சாட்டுக்களிலேயே ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

17 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதவான் விராஜ் வீரசூரிய, பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் எனவும், தண்டனை பணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்;  வழங்காவிட்டால் மேலும் 3 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், HCR/92/2019 வழக்கு இலக்கம் கொண்ட வலப்பனை பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தனது உறவினரான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு முதல் தொடரப்பட்ட வழக்கில், இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். 

இவருக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு 07 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை வழங்க வேண்டும் எனவும் தண்டனை பணமாக நீதிமன்றத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தாத பட்சத்தில் மேலும் 06 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52
news-image

மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல்...

2026-09-14 15:45:54