அர­சியல் பொறியில் சிக்­குண்­டி­ருக்கும் மஹிந்த ராஜபக்ஷ் தற்­போது இரட்டை வேடம் போடுகின்றார் என இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அர­சியல் ரீதியில் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்கை தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

மஹிந்த ராஜபக்ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­ததன் பின்னர் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்­பெற்ற பொதுத் தேர்தல் வரைக்­கு­மான 8மாத காலம் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை இல்­லாத நிலை­யி­லேயே  அர­சாங்கம் இருந்­தது.

இதில் வியப்­புக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் அந்த காலப்­ப­குதியில் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் தனக்கு ஆத­ர­வா­ன­வர்கள் என தெரி­வித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ குறைந்த பட்சம் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்­றை­யேனும் கொண்­டு­வ­ரா­த­மை­யாகும்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட வேட்­பாளர் பட்­டி­யலில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான மஹிந்த ராஜபக்ஷ, பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் பாரா­ளு­மன்­றத்­துக்குள் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிக்­காமல் ஒதுங்­கிக்­கொண்­டுள்­ளமை மற்றும் வரவு–செலவு திட்ட வாக்­கெ­டுப்பில் கூட வாக்­க­ளிக்­காமல் சென்­றமை அவர் அர­சியல் பொறியில் சிக்­கிக்­கொண்­டுள்­ள­மை­க்கு சான்றாகும்.

அதே­போன்று தற்­போது சைட்டம் பிரச்­சினை தொடர்­பா­கவும் அவர் இரட்டை வேடத்தை பின்­பற்றும் வகை­யி­லேயே கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். அன்று சைட்டம் ஆரம்­பிப்­ப­தற்கு மில்­லியன் கணக்கில் நிதி வச­தி­களை செய்­து­கொ­டுத்த ராஜபக் ஷ இன்று சைட்­டத்­துக்கு  எதிர்ப்பு தெரி­விக்­கின்­றார்.

அத்­துடன் கோடிக்­க­ணக்கில் பாரிய வட்­டிக்கு கடன் பெற்­றுக்­கொண்டு அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் விமான நிலையம் போன்ற பொரு­ளா­தார இலா­ப­மற்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மஹிந்த ராஜபக்ஷ ஆரம்­பித்­தி­ருந்தார். என்­றாலும் அந்த அபி­வி­ருத்தி திட்­டங்­களை இலாப­மீட்டும் முத­லீட்டு வல­யங்­க­ளாக மாற்­றி­ய­மைக்­கும்­போது அதற்கு எதி­ராக செயற்­ப­டு­கின்றார்.

மேலும் நாட்டில் இருக்கும் மாகா­ண ­ச­பை­களில் பெரும்­பா­லா­னவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் முத­ல­மைச்­சர்­க­ளுக்கு கீழ் செயல்­ப­டு­கின்­ற­வை­யாகும்.

இந்த மாகாண சபை­க­ளுக்கு கீழ் மக்­க­ளுக்கு சேவை­செய்­யக்­கூ­டிய கல்வி மற்றும் சுகா­தாரம் போன்ற துறைகள் உரித்­தா­கின்­றன.நாடு பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுத்­துள்­ள­தாக தெரி­வித்­து­வரும் மஹிந்த மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பமாக செய்யவேண்டியிருப்பது மாகாண சபைகளின் அதிகாரங்களை மாற்றியமைத்து அவற்றை வீழ்த்துவதாகும்.

எனவே மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சி முடியுமானால் ஒரு மாகாணசபையையேனும் வீழ்த்தி அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்கட்டும் என்றார்.