தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பாடல் எழுதுவது, பாடுவது, தயாரிப்பு, இயக்கம் என பல அவதாரங்களை எடுத்து, அவற்றில் வெற்றியும் கண்டு வருகிறார்.
தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'பவர் பாண்டி' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. அது மட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் 'பவர் பாண்டி' திரைப்படம் பெரியளவில் கொண்டாடப்பட்டது.
தற்போது நடிகர் தனுஷ் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'ராயன்' திரைப்படம் இந்த வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகும் மற்றுமொரு படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் அனிகா, சுரேந்திரன், பிரியா வாரியர், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
நேற்று (14) காதலர் தினத்தை முன்னிட்டு பட குழுவினர் இந்த படத்தின் போஸ்டரை பகிர்ந்து காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் தனுஷின் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமாகும்.
இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வண்டர் பேர் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர. நிகேஷ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM