ரஃபாவில் மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மை மிக்க திட்டம் எதுவும் சர்வதேச சமூகத்திடம் இல்லை - அவுஸ்திரேலியா

Published By: Rajeeban

15 Feb, 2024 | 01:59 PM
image

ரஃபாவில்தஞ்சமடைந்துள்ள மக்களை பாதுகாப்பதற்கான நம்பகதன்மை மிக்க நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் எதனையும் சர்வதேச சமூகம்  இதுவரை முன்வைக்கவில்லை என அவுஸ்திரேலிய  வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கரிசனைகளையே  அவுஸ்திரேலியா வெளியிடுவதாக தெரிவித்துள்ள பெனிவொங் அவுஸ்திரேலியாவின் நெருங்கிய நாடுகளின் கரிசனைகளை நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார்.

எனது கருத்துக்கள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள்  சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுக்ககூடிய பாரிய நடவடிக்கை குறித்த எங்கள்ஆழ்ந்த கரிசனைகளை மீண்டும் வலியுறுத்தவிரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு தஞ்சமடைந்துள்ள மில்லியன் கணக்காண மக்களிற்கு பேரழிவு  ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நெரிசலாக  வாழும் பகுதிகளில் இராணுவநடவடிக்கை என்பது ஆபத்தானது பொதுமக்களிற்கு இழப்புகள் ஏற்படலாம் எனவும்; அவர்தெரிவித்துள்ளார்.

இது நியாயப்படுத்த முடியாதது என அவுஸ்திரேலியா கருதுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58
news-image

'புகையிரத பயணிகளிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரிகள்...

2025-03-12 13:04:11