2017ஆம் ஆண்­டுக்­கான வடக்கின் சமரில் யாழ். மத்திய கல்லூரி அணியை 7 ஓட்­டங்­களால் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்­லூ­ரிக்­கு­மி­டையில் நடை­பெற்ற வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் 111 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் கடந்த இரண்டு நாட்­க­ளாக நடை­பெற்று வந்­தது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்.மத்­திய கல்­லூரி அணி முதல் இன்­னிங்ஸில் 164 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி 253 ஓட்­டங்­களைக் குவித்து 89 ஓட்­டங்­களால் முன்­னிலை பெற்­றது.

அதைத் தொடர்ந்து இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ். மத்­திய கல்­லூரி அணி நேற்­றைய இரண்டாம் நாளில் 82 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 7 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இதன்­மூலம் 111 ஆவது வடக்கின் சமரில் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி அபார வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.