மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-06, அல் அமீன் வீதியில் வசித்து வந்த ரஹ்மதுல்லாஹ் முஹம்மது பாஸில் (வயது 25) இன்று அதிகாலை கட்டாரில் மரணமடைந்தார். 

கடந்த பல மாதங்களாக நோய்வாய்பட்டிருந்த இவர் கட்டார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

மேற்படி இளைஞனின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)