(நெவில் அன்தனி)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்ததை அடுத்து சகலதுறை வீரருக்கான தரவரிசையில் நபி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 2019 மே 7ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 9ஆம் திகதிவரை 1739 நாட்கள் முதலிடத்தில் இருந்தவாறு ஷக்கிப் அல் ஹசன் செலுத்திவந்த ஆதிக்கத்தை மொஹமத் நபி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
மொஹமத் நபி 314 தரவரிசை புள்ளிகளைப் பெற்று ஷக்கிப் அல் ஹசனைவிட 4 புள்ளிகள் விததியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
ஷக்கிப் அல் ஹசனுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ரஷித் கான் முதலிடத்தில் இருந்துவந்தார்.
இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 136 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் 39 வயதான மொஹமத் நபி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளார்.
இதன் மூலம் மிகக் கூடிய வயதில் (39 வருடங்கள், ஒரு நாள்) சகலதுறை வீரருக்கான தரவரிசையில் முதல் இடத்தை அடைந்தவர் என்ற சாதனையை மொஹமத் நபி நிலைநாட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதனை இலங்கையின் திலக்கரட்ன டில்ஷானுக்கு சொந்தமாக இருந்தது. டில்ஷான் 2015ஆம் ஆண்டு தரவரிசையில் முதலிடத்தை அடைந்தபோது அவரது வயது 38 வருடங்கள், 8 நாட்களாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM