தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் கொடகம பகுதியிலுள்ள வெளியேறும் வீதிக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.