தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

14 Feb, 2024 | 04:15 PM
image

உலகளவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக்களில் மூன்று பேருக்கு  த்ரோம்போசைட்டோபீனியா எனும் தட்டணுக்களின் எண்ணிக்கையில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டூருக்கிறது. மேலும் இதற்கான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பான நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி பலனளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

த்ரோம்போசைட்டோபீனியா என்பது உங்களுடைய குருதியிலுள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை இயல்பான அளவைவிட மிகக் குறைவாக இருக்கும் ஒரு நிலையாகும்.

ரத்தம் உறைவதற்கு உதவும் இந்த நிறமற்ற ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்..., ரத்தப்போக்கு அதிகமாகி பாரிய அச்சுறுத்தலை உண்டாக்கும்.

சில தருணங்களில் ஆபத்தான அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக் கூடும். இது பிள்ளைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் பாதிக்கிறது.

தோளில் ஏற்படும் சிராய்ப்பு, மேலோட்டமான ரத்தப்போக்கு, கால் பகுதியில் புள்ளி வடிவிலான ரத்தப் போக்கு, காயங்களில் ஏற்படும் தடையற்ற.. நிறுத்த இயலாத ரத்தப்போக்கு, உங்கள் ஈறுகள் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் ரத்தப்போக்கு, சிறுநீர் அல்லது மலத்தில் குருதி வெளியேறுவது, மாதவிடாய் தருணங்களில் இயல்பான அளவை விட கூடுதலான ரத்தப்போக்கு, மண்ணீரல் வீக்கம், சோர்வு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய உடலில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என பொருள் கொள்ளலாம்.

வேறு சிலருக்கு டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று காரணமாகவும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை திடீரென்று இயல்பான அளவைவிட குறைந்துவிடும்.

பொதுவாக டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் ஏழு அல்லது எட்டு நாட்களுக்குள் முழுமையான நிவாரணத்தை சிகிச்சைகளின் மூலம் பெற்று விடலாம். இதன் போது குறைந்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதற்குரிய பிரத்யேக சிகிச்சைகளின் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்.

ஆனால் சிலருக்கு இத்தகைய காய்ச்சலுக்கு பின்னரும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை என்பது குறைவாக இருந்தால்.. அதனை அதிகரிக்க பிரத்யேக பரிசோதனையும், சிகிச்சையும் அவசியமாகும்.

இதன்போது விரிவான இரத்த பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். அதன் பிறகு தோல், மண்ணீரல் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான பிரத்யேக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும் அவசியமாகும். இதன்போது பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.

சிலருக்கு மட்டும் ரத்த தட்டணுக்கள் மாற்று சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைப்பர். வேறு சிலருக்கு பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச் எனப்படும் சிகிச்சையும், வெகு சிலருக்கு மட்டுமே மண்ணீரலை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். வேறு சிலருக்கு எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாளல்... அவர்களுக்கு பிரத்யேக சத்திர சிகிச்சை செய்து நிவாரணம் வழங்குவர்.

டொக்டர் வினோத்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29