2017 ஆம் ஆண்டுக்கான கரிபியின் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு இன்று இடம்பெற்றது.

இந்த வீரர்கள் தெரிவில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு முன்னணி வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின்  முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

  குமார் சங்கக்கார  ஜமைக்கா டளவாஸ் அணிக்கு விளையாடவுள்ளதுடன்,  லசித் மலிங்க சென் லூசியுர் ஸடார்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

குறித்த அணிகள் சங்கக்கார மற்றும் மலிங்கவை தலா ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை பணத்தில் சுமார் 1.9 கோடி) வாங்கியுள்ளன.