பிரபலங்களின் லீலைகளை டுவிட்டரில் வெளியிட்ட பாடகியின் லீலைகள் வெளியானது

Published By: Ponmalar

10 Mar, 2017 | 07:52 PM
image

திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 

திரையுலக பிரபலங்கள் பலரின் திரைமறைவு லீலைகளை பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி திரையுலகையே பரபரப்பாகியது. அதில், கொலவெறி நடிகரை சுற்றித்தான் நிறைய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. அதேபோல், கொலவெறி நடிகர் மீதான தாக்குதல்கள்தான் அந்த டுவிட்டரில் அதிகப்படியாக இருந்தது.

இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.. தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா?  என்ற அடிப்படையில்,, பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார். நடனத்தின்போது அந்த நடிகரை பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவது போல் உள்ளது. நடிகருடன்  நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35