(க.கமலநாதன்)

கூட்டு எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றனர். அதனால் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஆனால் கூட்டமைப்பின் பிரச்சினைகளை ஏற்பதற்கான களம் பாராளுமன்றம் அல்ல.

எனவே சுதந்திர கட்சியின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவதை விடுத்து ஜனாதிபதியிடத்தில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.