தேசிய தர விருது விழாவில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடமிருந்து (SLSI) ஹலால் கவுன்சிலுக்கு Merit விருது

14 Feb, 2024 | 11:09 AM
image

ஹலால் சான்றுறுதிப் பேரவையானது (HAC), இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) ஏற்பாடு செய்யப்பட்ட, மதிப்புமிக்க இலங்கை தேசிய தர விருதுகள் (SLNQA) 2022 விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இடமிருந்து வலமாக: Systems Certification, SLSI பணிப்பாளர் திருமதி எஸ்.யு. நாரங்கொட; HAC பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) - பணிப்பாளர் ஆகிப் ஏ வஹாப்; SLSI தலைவர் கலாநிதி அசங்க ரணசிங்க; HAC ஆரம்ப உறுப்பினர் பஷால் இஸ்ஸதீன்; HAC முகாமைத்துவ பணிப்பாளர் றிஸ்வி ஷஹீட்; தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்; SLSI பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திக்க ஜி. சேனாரத்ன; Quality Assurance பணிப்பாளர் திருமதி எம்.பி.டி. நீலகாந்தி

தர முகாமைத்துவத்தில் சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவின் Malcolm Baldrige National Quality Awards விருது நிகழ்வில் பின்பற்றப்படுகின்ற, விருது வழங்குவதில் உலகளாவிய அளவீட்டு முறைகளைக் கொண்ட கண்டிப்பான அளவீட்டு முறைகளை, SLNQA விருது விழா பின்பற்றுகின்றது. அந்த வகையில், HAC தனது செயற்பாடுகளில் மிக உயர்ந்த தரங்களை பேணுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த விருது எடுத்துக் காட்டுகின்றது.

HAC இன் ஹலால் சான்றிதழ் இலங்கையில், 240 இற்கும் மேற்பட்ட  உணவு மற்றும் பான உற்பத்தியாளர்களால் பெறப்பட்டுள்ளது. அத்துடன் HAC இன் பங்களிப்பின் மூலம், இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிகள் 2022இல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள், ஹலால் தரங்கள்  பேணப்பட்டுள்ளதை உறுதி செய்வதோடு, நுகர்வோரின் நலன்களை அது பாதுகாக்கின்றது.

தாம் உண்ணும் உணவுப் பொருட்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அவற்றில் என்ன உள்ளது என்பதை அறிய வேண்டும் என்பதில் தற்போது நுகர்வோர் அதிகளவில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஹலால் சான்றளிக்கப்பட்ட ஒரு தயாரிப்பானது, இறந்த விலங்குகள், மனித உடல் பாகங்கள், பூச்சிகள், அபாயகரமான பொருட்கள், விஷம் மற்றும் நச்சுப் பொருட்கள், இரத்தம், பன்றி மற்றும் மதுபானம் ஆகிய விடயங்கள் கொண்ட மூலப்பொருட்களையோ, பதப்படுத்திகளையோ, சுவையூட்டிகளையோ கொண்டிராதவையாக இருக்க வேண்டும்.

ISO 17065 & GSO 2055 தர நிலைகளை பின்பற்றும் HAC ஆனது, Gulf Cooperation Council (GCC) அங்கீகார மையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதோடு, ISO 9001 சான்றிதழைப் பெற்று, சர்வதேச தர முகாமைத்துவ தரங்களை உரிய முறையில் பேணிச் செயற்படுகின்றது.

இவ்விடயங்கள், திறனான சேவை வழங்கலை HAC மேற்கொள்ள உதவுதோடு, ஹலால் தரநிலைக்கு இணங்கி செயற்படும் நிறுவனங்கள், தமது ஹலால் சான்றிதழை விரைவாகப் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பில், ஹலால் சான்றுறுதிப் பேரவையின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆகிப் ஏ வஹாப் தெரிவிக்கையில், "SLSI இனால், இலங்கை தேசிய தர விருது விழாவில் HAC இற்கு Merit விருது வழங்கப்பட்டமையானது, சிறந்து விளங்குவதற்கும் தர முகாமைத்துவத்தில் உயர் தரத்தை பேணுவதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் செயற்படும் HAC ஆனது, உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உள்ளூர் உணவு மற்றும் பானத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.” என்றார்.

HAC இன் பிரதிநிதிகள், இடமிருந்து வலமாக: பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) - பணிப்பாளர் ஆகிப் ஏ வஹாப்; PC ஆரம்ப உறுப்பினர் முஹம்மது சுஹைர்; ஆரம்ப உறுப்பினர் பஷால் இஸ்ஸதீன்; பணிப்பாளர் அனஸ் ஜுனைட், பணிப்பாளர் எம்.யூ.எம். ஹுஸைன், முகாமைத்துவ பணிப்பாளர் றிஸ்வி ஷஹீட்; Quality Assurance தலைவர் எம்.என். எம். நபாஸ்; பணிப்பாளர் திருமதி ஸஹரா அன்சாரி; பேரவை உறுப்பினர் பர்மன் நிசார்; வாடிக்கையாளர் சேவைகள் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ஸாகிர் றிஸ்வி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58