(செ.சுபதர்ஷனி)
சுங்க பிரிவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்ட 1500 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க ஆடைகள் இலங்கை சுங்கத்தின் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்திருந்த சந்தேகத்துக்கிடமான 4 கொள்கலன்கள் ஒருகொடவத்தை பகுதியில் உள்ள சரக்குப் பொருள் ஏற்றி இறக்கும் முனையத்தில் சுங்கப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை (13) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
(படப்பிடிப்பு :எம். எஸ் சுரேந்திரன்)
இதன்போது கொள்கலன்களில் பிரபல நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் 1,60,000 ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டு சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சரக்கின் உரிமையாளர் சுங்கத்திற்குச் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களில் துணிவகைகள் மாத்திரம் கொள்வனவு செய்வதற்காகத் தெரிவித்து ஆடைகளைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆடைகளின் பெறுமதி சுமார் 1500 இலட்சம் ரூபாய் என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இவை சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தால் சுங்கப் பிரிவினருக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஆடைகளைக் கொள்வனவு செய்த உரிமையாளர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆடைகள் தொடர்பாகச் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM