ஹட்டன் பகுதியில் அதிக பனி மூட்டம் நிறைந்து காணப்படுவதனால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரவிட்டு  வாகனங்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் அண்மைகாலமாக மழையுடன் கூடிய காற்றும் பனிமூட்டம் நிறைந்த காலநிலை நிலவி வருகின்றது.

கொழும்பு ஹட்டன் மற்றும்  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்துவோர் அவதானத்துடன் செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.