(நெவில் அன்தனி)
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியைக் கட்டியெழுப்பும் கட்டத்தில் இருப்பதாக தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை (14) நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கண்டி பல்லேகலையில் பயிற்சியின்போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ்
'அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அணியைக் கட்டியெழுப்பும் கட்டத்தில் நாங்கள் உள்ளோம். சகல வீரர்களும் தத்தமது பாத்திரம் என்னவென்பதை நன்கு அறிவார்கள். அத்துடன் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர வேண்டும்' என கிறிஸ் சில்வவூட் கூறினார்.
ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இதுவரை இலங்கை அணி சிறப்பாக விளையாடி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
'ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதுவரை எமது அணியினர் சிறப்பாக விளையாடியுள்ளனர். அவர்களது ஆற்றல் வெளிப்பாடுகளைக் கண்டு நான் பூரிப்படைந்தேன். துடுப்பாட்ட வீரர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெற்றதுடன் சிறப்பான இணைப்பாட்டங்களையும் ஏற்படுத்தினர். முதல் 6 துடுப்பாட்ட வீரர்களும் திறமையாக விளையாடி வருவது திருப்தி தருகிறது. அவர்கள் அனைவரும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
'ஆனால், பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முதலில் துடுப்பெடுத்தாடி பெறும் மொத்த எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அவர்கள் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 ஓட்டங்கள் குவிப்பதென்பது சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் அந்த எண்ணிக்கையைத் தக்கவைத்து வெற்றிபெறுவது பந்துவீச்சாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அவர்கள் நிறைய கற்றுவருகிறார்கள். அது வரவேற்கத்தக்கது.
'வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தி விக்கெட்களை சரிக்க வேண்டும். அவர்கள் பந்துவீசும் இலக்குகள், லைன் அண்ட் லெந்த் என்பவற்றை நோக்கும்போது அவை வெற்றி அளிக்கவில்லை என்றே கூறத்தோன்றுகிறது. எனவே சகல பந்துவீச்சாளர்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல சுழல்பந்துவீச்சாளர்களும் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். நான் எனது அனுபவத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறேன்' என கிறிஸ் சில்வவூட் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM