கம்பஹா மாவட்டத்தின் பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதிக மக்கள் தொகை மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக, கம்பஹா மாவட்டம் ஒரு முக்கிய சேவை வழங்கல் மையமாக திகழ்கின்றது.
இதனால் சுகாதார சேவைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளதோடு, அந்த தேவையை பூர்த்தி செய்ய தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியசாலையை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கம்பஹா மாவட்டத்தில் அரச - தனியார் பங்களிப்பின் கீழ் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
பியகம பிரதேசத்தில் காணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னர் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM