நாம் வீட்டை விட்டு வெளியில் சென்று பணியாற்றி விட்டு மீண்டும் இல்லம் திரும்பும் போது பல எதிர் நிலையான ஆராக்களின் தாக்குதலுக்கு ஆளாகி எம்முடைய நேர் நிலையான ஆற்றலை இழந்து, எதிர் நிலையான ஆற்றலின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகிறோம். இதனால் பல்வேறு விவரிக்க இயலாத சொல்ல இயலாத உபாதைகளுக்கு ஆளாகிறோம்.
அது மட்டுமல்ல எமக்கு வர வேண்டிய தன வரவிலும், புகழ் மற்றும் செல்வாக்கிலும் பாரிய பின்னடைவையும் ஏற்படுத்துகிறது.
இதற்காக எம்முடைய முன்னோர்கள் உபாசனை தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்த உபாசனை தெய்வ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்பவர்கள்.. எந்தவித தடைகளும் இல்லாமல் வாழ்வில் தொடர்ந்து முன்னேறுவதை காணலாம்.
எனவே 27 நட்சத்திரக்காரர்களும் தங்களுக்குரிய உபாசனை தெய்வத்தை கண்டறிந்து, அதற்குரிய மந்திரத்தையோ அந்த தெய்வத்தின் திருவுருவத்தையோ தொடர்ந்து வணங்கி வந்தால் போற்றி வந்தால் உங்களுக்குள் நேர் நிலையான ஆற்றல் அதிகரித்து தடைகளே இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைவதை அனுபவத்தில் உணரலாம்.
அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி - ஆகிய நான்கு நட்சத்திரக்காரர்கள் சப்த கன்னியர்களில் ஒருவரான பிராமி எனும் தெய்வத்தை அல்லது தேவதையை உபாசனை தெய்வமாக போற்றி வணங்கி வர வேண்டும்.
பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி ஆகிய நான்கு நட்சத்திரக்காரர்கள் சப்த கன்னியர்களின் ஒருவரான கௌமாரி எனும் தெய்வத்தை அல்லது தேவதையே உபாசனை தெய்வமாக போற்றி வணங்கி வர வேண்டும்.
கார்த்திகை, பூரம், மூலம், ரேவதி ஆகிய நான்கு நட்சத்திரக்காரர்கள் வராஹி அம்மனை உபாசனை தெய்வமாக போற்றி வணங்கி வர வேண்டும்.
ரோகிணி, உத்திரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரக்காரர்கள் சித்தா எனும் தேவதை வழிபட வேண்டும்.
மிருகசீரிஷம், ஹஸ்தம், உத்திராடம் எனும் மூன்று நட்சத்திரக்காரர்கள் வைஷ்ணவி தேவியை உபாசனை தெய்வமாக போற்றி வணங்க வேண்டும்.
திருவாதிரை, சித்திரை, திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரக்காரர்கள் மகேந்திரி எனும் தேவதையை உபாசனை தெய்வமாக போற்றி வணங்கி வர வேண்டும்.
புனர்பூசம், சுவாதி, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரக்காரர்கள் சாமுண்டி எனும் உபாசனை தெய்வத்தை போற்றி வணங்கி வர வேண்டும்.
பூசம், விசாகம், சதயம் ஆகிய மூன்று நட்சத்திரக்காரர்கள் மகேஸ்வரி எனும் தேவதையை உபாசனை தெய்வமாக போற்றி வணங்கி வர வேண்டும்.
இந்த தேவதைகள் சப்த கன்னியர்களாகவும், தேவதைகளாகவும் எம்முடன் காலம் காலமாக இணைந்து இருக்கிறார்கள். நாம் தான் அவர்களை பிரத்யேகமாக அறிந்து வழிபட மறந்து விட்டோம். இவர்களை உறுதியாக பற்றினால்... எம்முடைய கவலைகள் மறந்து, மறைந்து, மகிழ்ச்சி பொங்கும் .
தொகுப்பு சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM